'இரண்டே நாட்களில் கோடீஸ்வரர்களான 209 பேர்'... 'விற்பனையை அள்ளிய பிரபல நிறுவனம்!'...
முகப்பு > செய்திகள் > வணிகம்அமேசான் இந்தியாவின் 48 மணிநேர சலுகை விற்பனையில் வர்த்தகர்கள் 209 பேர் கோடீஸ்வரர்கள் ஆகியுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

அமேசான் பிரைம் வாடிக்கையாளர்களுக்கான 48 மணிநேர சலுகை விற்பனையில் சுமார் 4492 கோடி ரூபாய்க்கு விற்பனை நடைபெற்றுள்ள நிலையில், அதன்முலம் வர்த்தகர்கள் பலரும் கோடீஸ்வரர்கள் ஆகியுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இந்த விற்பனையானது கடந்த ஆண்டு தீபாவளி விற்பனையை விட கூடுதல் எனக் கூறப்பட்டுள்ள நிலையில், ஸ்மார்ட் போன்கள், எலக்ட்ரானிக் மற்றும் வீட்டு உபயோக பொருட்களின் விற்பனை தீபாவளி விற்பனையை விட அதிகமாகவும், அலங்காரப் பொருட்களின் விற்பனை குறைவாகவும் இருந்துள்ளது.
இந்த சலுகை விற்பனையில் சுமார் ஒரு லட்சம் சிறு, குறு வர்த்தகர்களுக்கு ஆர்டர்கள் கிடைத்துள்ளது. அதன்முலம் வர்த்தகர்கள் 209 பேர் இரண்டே நாட்களில் கோடீஸ்வரர்கள் ஆகியுள்ளதாக அமேசான் இந்தியாவின் விற்பனை பிரிவு மேலாளர் அமித் அகர்வால் தெரிவித்துள்ளார்.

மற்ற செய்திகள்
