கர்ப்பமாக இருந்தபோது கொரோனா தடுப்பூசி எடுத்துக் கொண்ட 'பெண்'... 'குழந்தை' பிறந்ததும் காத்திருந்த 'அதிசயம்'... ஸ்தம்பித்து போன 'மருத்துவர்கள்'!!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Ajith | Mar 18, 2021 09:33 AM

பிரசவத்தின் மூன்று வாரங்களுக்கு முன்பு, பெண் ஒருவர் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட நிலையில், அதன் பிறகு பிறந்த குழந்தையை பரிசோதனை செய்து பார்த்ததில், ஆச்சரியமடைந்து போயுள்ளனர் மருத்துவர்கள்.

america babygirl born to vaccinated woman has covid 19 antibodies

அமெரிக்காவின் ஃபுளோரிடா (Florida) மாகாணத்தைச் சேர்ந்த சுகாதார பணியாளர் ஒருவர், தன்னுடைய பிரசவத்திற்கு மூன்று வாரங்களுக்கு முன்பு கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸ் செலுத்தியுள்ளார்.

மாடர்னா (Moderna) தடுப்பூசி போட்டுள்ள அந்த பெண்ணுக்கு தற்போது பெண் குழந்தை பிறந்துள்ள நிலையில், அந்த குழந்தையை பரிசோதித்து பார்த்ததில், அதன் உடலில் கொரோனவுக்கான எதிர்ப்புச் சக்தி இயற்கையாகவே உருவாகியிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

america babygirl born to vaccinated woman has covid 19 antibodies

இதுகுறித்து ஃபுளோரிடா அட்லாண்டிக் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள் கூறுகையில், கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட பிறகு, அதிலிருந்து உருவான எதிர்ப்பு சக்தி, தாயின் நஞ்சுக் கொடி (Placenta) வழியாக மற்ற ஊட்டச்சத்துக்களுடன் சேர்ந்து கிடைத்திருக்க கூடும் என்கின்றனர்.

america babygirl born to vaccinated woman has covid 19 antibodies

மேலும், கொரோனா தொற்றின் மூலம் பாதிக்கப்படாத கர்ப்பிணி பெண், தடுப்பூசி செலுத்திக் கொண்ட சில வாரங்களிலேயே குழந்தை பிறந்ததும், அதன் உடலுக்கு ஆன்டிபாடிகள் கடத்தப்பட்டிருப்பது ஆச்சரியம் அளிக்கிறது என்றும் நிபுணர்கள் கூறுகின்றனர்.

america babygirl born to vaccinated woman has covid 19 antibodies

ஆனால், எத்தனை நாளைக்கு இன்னும் அந்த குழந்தையின் உடம்பில், இந்த நோய் எதிர்ப்பு சக்தி இருக்கும் என்பதும், நோய்க் கிருமியிடம் இருந்து எந்த அளவுக்கு பாதுகாப்பு அளிக்கும் என்பது குறித்த விவரங்கள் தெரியவில்லை என்கின்றனர்.

america babygirl born to vaccinated woman has covid 19 antibodies

வீரியமிக்க நோய் எதிர்ப்பு சக்தியுடன் பிறந்துள்ள குழந்தையின் தண்டுவட செல்கள் மற்றும் ரத்தம் பரிசோதனை செய்யப்பட்டதாக இதுகுறித்து செய்திகள் வெளியாகியுள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. America babygirl born to vaccinated woman has covid 19 antibodies | World News.