'கொரோனாவை' எதிர்க்க உதவும் 'டி-செல்கள்' சிகிச்சை... 'புதிய வழிமுறைகள்' குறித்த 'ஆராய்ச்சி' முடிவுகள் 'வெளியீடு...'
முகப்பு > செய்திகள் > உலகம்T செல்களிலிருந்து எதிர்ப்பு சக்தியை உருவாக்கும் புதிய வழிமுறை குறித்த ஆராய்ச்சி முடிவுகளை விஞ்ஞானிகள் வெளியிட்டுள்ளனர்.

கொரோனா தாக்கம் உலகெங்கும் அதிகரித்து வரும் நிலையில், தடுப்பு மருந்து கண்டுபிடிக்க உலகம் முழுவதும் விஞ்ஞானிகள் முயற்சி செய்து வருகின்றனர். இந்த நிலையில், கொரோனா வைரஸ் தாக்கப்பட்டவரின் உடலில் உள்ள டி செல்களிலிருந்து சுரக்கும் சைட்டோகைன் என்ற ரசயானத்திலிருந்து உடலில் எதிர்ப்பு சக்தியை உருவாக்கும் புதிய வழிமுறையை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.
சயின்ஸ் இம்யூனாலஜி என்ற மருத்துவ இதழில் இந்த ஆராய்ச்சி முடிவுகள் பிரசுரிக்கப்பட்டுள்ளன. இந்த ஆராய்ச்சியில் 10 கொரோனா நோயாளிகள் பயன்படுத்தப்பட்டனர். இவர்கள் அனைவருமே தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டவர்கள். இவர்களது டி-செல்கள் கொரோனா வைரசால் தாக்கப்பட்டுள்ளன.
அதன் மூலம் சைட்டோகைன் என்ற ரசாயனத்தை இந்த டி-செல்கள் சுரக்கின்றன. இவை மருத்துவ குணங்கள் கொண்டது. இதன்மூலம் ஓரளவுக்கு உடலில் எதிர்ப்பு சக்தியை உருவாக்கலாம் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

மற்ற செய்திகள்
