'2 தீட்சிதர்களுக்கு கொரோனா!'... 'புதிய கட்டுப்பாட்டால்!'.."150 தீட்சிதர்கள் பங்கேற்க வேண்டிய சிதம்பரம் நடராஜர் கோவில் திருமஞ்சன விழாவில் சிக்கலா?!"
முகப்பு > செய்திகள் > தமிழகம்கடலூர் மாவட்டம் சிதம்பரம் நடராஜர் கோவில் தீட்சிதர்கள் இருவருக்கு கொரோனா உறுதியானது.

முன்னதாக இந்த கோவிலில் ஆனி திருமஞ்சன திருவிழா கடந்த ஜூன் 19ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அன்றைய தினம் 50 தீட்சிதர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். இந்த நிலையில் தேர்த்திருவிழா, தரிசனம் உள்ளிட்டவற்றை சமூக இடைவெளியுடன் நடத்தவும், அதில் 150 தீட்சிதர்கள் பங்கேற்கவும் மாவட்ட நிர்வாகம் உத்தரவு அளித்திருந்தது.
இதனிடையே அப்பகுதியில் கீழ வீதியில் இருக்கும் ஒரு தீட்சிதர், வடக்கு சன்னதியில் இருக்கும் ஒரு தீட்சிதர் என இரண்டு பேருக்கு கொரோனா உறுதியானதை அடுத்து அவர்கள் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சுகாதாரத்துறையினரால் அழைத்துச் செல்லப்பட்டனர்.
அதன்பின்னர் நகராட்சி ஆணையர் சுரேந்தர் ஷா உத்தரவின் பேரில் கோவில் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு தீட்சிதர்களுக்கு தொற்று உறுதியானதால், கோவிலுக்கு செல்ல 5 தீட்சிதர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும் என கலெக்டர் அன்புச்செல்வன் உறுதியாக தெரிவித்துள்ளார். இதனால் கோவிலில் ஆனி திருமஞ்சன விழா எளிமையாக நடத்துவதற்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்தும், கோயிலுக்குள் செல்லக்கூடிய தீட்சிதர்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளதால், திருவிழாவை நடப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.

மற்ற செய்திகள்
