உலகம் முழுவதையும் அச்சுறுத்தி வரும் கொரோனாவின் 2-வது அலை உருவாகக்கூடும் என கூறப்படுகிறது.
மொத்த நாடுகளும் கொரோனாவுக்கு எதிராக கடுமையாக போராடி வருகின்றன. இன்னும் தடுப்பு மருந்துகள் கண்டறியப்படவில்லை என்பதால் ஊரடங்கு உள்ளிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளே கொரோனாவை எதிர்கொள்ள உதவுகின்றன.
இந்த நிலையில் உலகின் பல நாடுகளில் கொரோனா ஊரடங்கு தளர்த்தப்பட்டு வருவதால் கொரோனா 2-வது அலை உருவாகக் கூடும் என நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து இங்கிலாந்து நாட்டின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் புள்ளி விவரங்களை அடிப்படையாகக் கொண்டு கொரோனாவின் இரண்டாவது அலை வீசும் நாடுகளின் பட்டியலை வெளியிட்டுள்ளது.
இதில் அமெரிக்கா, ஈரான், ஜெர்மனி, சுவிட்சர்லாந்து, உக்ரைன், வங்காள தேசம், ஸ்வீடன், பிரான்ஸ், இந்தோனேசியா ஆகிய நாடுகள் இடம்பெற்று இருக்கின்றன. உலக அளவில் கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்படுவோரின் தினசரி எண்ணிக்கை உச்ச அளவை அடைந்து வருவதாக உலக சுகாதார அமைப்பு கடந்த ஞாயிற்றுக்கிழமை கவலை தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.