'அக்கா வீட்டில் குண்டு போட்ட தம்பி...' 'ஒரு வெடிகுண்டை நாய் கடிச்சிருக்கு, அப்போ...' மதுப்பழக்கத்தை கண்டித்ததால் தம்பியின் வெறிச்செயல்...!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Issac | May 21, 2020 05:32 PM

மது அருந்திவிட்டு சொந்த அக்காவின் வீட்டில் 4 நாட்டு வெடிகுண்டுகளை வீசிய நபரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் வெடிக்காத அங்கிருந்த குண்டை கடித்த நாய் தலை சிதறி இறந்த செய்தி மேலும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

drunken brother threw Country bomb to his sister home

செல்வராணி என்பவர் மதுரை மாவட்டம் பாலமேடு அருகே ராமகவுண்டன்பட்டியில் கணவர் சசிகுமாருடன் வாழ்ந்து வருகிறார். செல்வராணிக்கு முருகன்(30) என்னும் தம்பி உள்ளார். கொரோனா ஊரடங்கு முன்பு அப்பகுதியில் இருக்கும் 55 வயதான சின்னத்துரை என்பவருடன் சேர்ந்து அடிக்கடி மது அருந்திவிட்டு இருவருமாக செல்வராணியின் வீட்டிற்கு வந்து தகராறு செய்வது வழக்கம்.

ஊரடங்கு காலத்தில் மதுக்கடைகள் முடிய சமயம் வரை செல்வராணிக்கு எந்தவித தொந்தரவும் இல்லாமல் இருந்துள்ளது. இந்நிலையில் முருகன் கடந்த ஒரு வாரமாக மறுபடியும் குடித்துவிட்டு தகராறில் ஈடுபட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த செல்வராணி, முருகன் மற்றும் சின்னத்துரையை சராமாரியாக திட்டியுள்ளார்.

இதனால் கோபமடைந்த முருகன் மற்றும் சின்னத்துரை தட்டு தடுமாறி வீட்டிற்கு சென்று, அங்கிருந்த 4 நாட்டு வெடிகுண்டை எடுத்து வந்து செல்வராணியின் வீட்டில் போட்டுள்ளார். பயங்கர குடிபோதையில் இருந்த முருகன் போட்ட 4 வெடிகுண்டுக்களில் ஒன்று மட்டுமே வெடித்துள்ளது. வெடிக்காமல் இருந்த ஒரு குண்டை செல்வராணி வளர்த்து வந்த நாய் கடித்ததால் சம்பவ இடத்திலேயே தலை சிதறி இறந்தது.

சம்பவம் அறிந்து செல்வராணி வீட்டிற்கு வந்த பாலமேடு போலீசார் வெடிக்காத 2 நாட்டு வெடிகுண்டுகளைக் கைப்பற்றி, முருகனைக் கைது செய்தனர். மேலும் தப்பியோடிய சின்னத்துரையைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ள நிலையில், இவர்களுக்கு நாட்டு வெடிகுண்டு எங்கிருந்து கிடைத்தது பற்றியும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags : #COUNTRYBOMB