"135 வருசமா இங்க தான் இருந்துச்சா?".. வீட்டின் தரைக்கு அடியில் இருந்த 'பாட்டில்'.. உள்ள இருந்த லெட்டர படிச்சிட்டு மிரண்டு போன குடும்பம்!!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Ajith Kumar V | Nov 18, 2022 08:03 PM

தனது வீட்டில் இருந்த தரை பலகைக்கு அடியில், ஒரு பாட்டிலுக்குள் 135 வருட மெசேஜ் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டதை அறிந்து ஒரு பெண் திகைத்து போயுள்ளார்.

135 year old bottle found hidden under the house floor

Also Read | திருமண நிகழ்ச்சியில் திடீர்ன்னு என்ட்ரி கொடுத்த 'சவப்பெட்டி'.. பதறிப் போன விருந்தினர்கள்!!.. பின்னணி என்ன??

அவ்வப்போது சோஷியல் மீடியாவில் நாம் வலம் வரும் போது பல ஆண்டுகளுக்கு முன்பு எழுதி வைக்கப்பட்டு அலல்து ஏதாவது ஒரு இடத்தில் நீண்ட நாட்களாக மறைந்தே இருந்த பொருள் திடீரென யார் கண்ணிலாவது பட்டு அதில் இருக்கும் விஷயம், பெரிய அளவில் மிரள வைக்கக் கூடிய வகையில் இருப்பது பற்றி நாம் கேள்விப்பட்டிருப்போம்.

அப்படி தான் தற்போது ஒரு சம்பவம் நடந்துள்ளது. வீட்டில் இருந்த ரேடியேட்டரை நகர்த்துவதற்காக பிளம்பர் ஒருவரை Eilidh Stimpson என்ற பெண் வர வைத்துள்ளார். மேலும் வீட்டில் இருந்த பலகை தரையில் இருந்த ரேடியேட்டரை நகர்த்தி அதனை வெட்டிய போது அதற்குள் இருந்த பொருளை கண்டு Eilidh Stimpson அதிர்ந்து போயுள்ளார்.

ஏனென்றால், அந்த பலகைக்கு அடியில் காலி பாட்டில் ஒன்றிற்குள் சுருட்டப்பட்ட காகித துண்டும் இருந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. முன்னதாக, தரையில் பலகையை ஒரு பகுதியில் அறுத்த போது அதற்குள் ஒரு அறை போல இந்த பாட்டில் இருந்ததை கண்டு பிளம்பர் மிரண்டு போனதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.

135 year old bottle found hidden under the house floor

உடனடியாக இது பற்றி எய்லித்திடம் அந்த பிளம்பர் தெரிவித்துள்ளார். உடனடியாக அதனை திறந்து காகிதத்தை படிக்க வேண்டும் என எய்லித் விரும்பினாலும் அவரது பிள்ளைகள் இரண்டு பேர் வரையும் அவர் ஆர்வத்துடன் காத்திருந்துள்ளார். இதனைத் தொடர்ந்து, குடும்பத்தினர் அனைவரும் வந்த பிறகு, அந்த பாட்டிலுக்குள் இருந்த காகிதத்தை பிரித்து படித்து பார்த்துள்ளனர்.

அப்போது அதில் இருந்த விஷயத்தை பார்த்து, எய்லித்தின் குடும்பத்தினர் வியப்பில் ஆழ்ந்து போயுள்ளனர். அந்த காகிதத்தில், "ஜேம்ஸ் ரிச்சி மற்றும் ஜான் க்ரீவ் ஆகியோர் இந்த தளத்தை அமைத்தனர். ஆனால், அவர்கள் இதில் இருந்த மதுவை குடிக்கவில்லை. அக்டோபர் 6 ஆம் தேதி 1887" என குறிப்பிட்டு இந்த பாட்டிலை கண்டுபிடிப்பவர்கள் நாங்கள் இறந்து விட்டதாக நினைப்பார்கள் என்றும் அதில் இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றது. இது தொடர்பாக எய்லித்தின் நண்பர் ஒருவர் சில ஆய்வுகள் மேற்கொண்டு 1880 களில் அங்கே வாழ்ந்த நபர்கள் பற்றிய விவரத்தை சேகரித்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது.

135 ஆண்டுகளுக்கு முன்பு எழுதிய குறிப்பு ஒன்று தற்போது கிடைத்துள்ள விஷயம், அதிகம் பேசு பொருளாக மாறி உள்ளது.

Also Read | சூப்பர்ஸ்டார் குரலில் "சுவாமியே சரணம் ஐயப்பா".. சபரிமலையில் ரஜினிகாந்த்.. இணையத்தை கலக்கும் அரிய வீடியோ!! Throwback

Tags : #BOTTLE #HIDDEN #HOUSE FLOOR

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. 135 year old bottle found hidden under the house floor | World News.