130 வருச பழைய பெட்டி.. ‘உள்ள இது கூட இருக்கலாம்’.. ஆச்சரியத்தை ஏற்படுத்திய சம்பவம்..!
முகப்பு > செய்திகள் > உலகம்சிலையை அகற்றும்போது 130 ஆண்டுகள் பழமை வாய்ந்த பெட்டி கண்டெடுக்கப்பட்ட சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவில் 1861 முதல் 1865-ம் ஆண்டு வரை உள்நாட்டுப் போர் நடைபெற்றது. அதில் அமெரிக்க மாநிலங்களின் கூட்டமைப்புக்கும், ஐக்கிய அமெரிக்க நாடுகளுக்கும் இடையே போர் மூண்டது. அப்போது 3 சதவீத மக்கள் (சுமார் 10 லட்சம் பேர்) உயிரிழந்தனர்.
அதில் அமெரிக்க மாநிலங்களின் கூட்டமைப்பின் ராணுவ ஜெனரலாக ராபர்ட் ஈ. லீ (General Robert E. Lee) என்பவர் இருந்தார். இந்தப் போரின் கதாநாயகன் என இவர் வர்ணிக்கப்பட்டு வந்தார். அதனால் இவருக்கு பல இடங்களில் சிலைகள் அமைக்கப்பட்டது. ஆனாலும் ஐக்கிய அமெரிக்காவுக்கு எதிராக செயல்பட்டதால் அவரது சிலையை அகற்றும் பணியில் விர்ஜினியா ஆளுநர் நடவடிக்கை மேற்கொண்டார். அதன்படி அவரது சிலைகளை அகற்றும் பணிகள் நடைபெற்று வருகிறது.
அப்படி அவரின் ஒரு சிலையை பெயர்த்து எடுத்த போது, அதில் ஒரு பெட்டி கண்டெடுக்கப்பட்டது. அதற்குள் 130 ஆண்டுகள் பழமைவாய்ந்த டைம் கேப்சூல் இருக்கலாம் என கூறப்படுகிறது. கடந்த 1887-ம் ஆண்டு வெளிவந்த செய்தித்தாள்களில் இதுகுறித்து குறிப்பிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து தெரிவித்த விர்ஜீனியா மாகாண ஆளுநர் ரால்ஃப் நார்தாம், ‘இது அனைவரும் எதிர்பார்க்கும் டைம் கேப்சூலாக இருக்கலாம். இதுகுறித்து ஆராய்ந்து வருகிறோம். ஆனால் இந்தப் பெட்டி இப்போதைக்கு திறக்கப்பட மாட்டாது’ என அவர் தெரிவித்துள்ளார்.
They found it! This is likely the time capsule everyone was looking for. Conservators studying it—stay tuned for next steps! (Won’t be opened today) pic.twitter.com/3lWrsPGZd2
— Governor Ralph Northam (@GovernorVA) December 27, 2021