இதெல்லாம் வேற மாரி.. 102 வயசுல ஓட்டப் பந்தயத்துல.. அதுவும் தங்கப் பதக்கம் பெற்ற தாத்தா.. அவரே சொன்ன சீக்ரெட்..
முகப்பு > செய்திகள் > உலகம்தாய்லாந்தில் வயதானவர்களுக்காக நடத்தப்பட்ட தடகள போட்டிகளில் 102 வயதான தாத்தா ஒருவர் தங்கப் பதக்கங்களை வென்று அனைவரையும் ஆச்சர்யப்படுத்தி இருக்கிறார்.
தங்கப் பதக்கம்
தாய்லாந்தில் கடந்த வாரம் 26-வது தாய்லாந்து மாஸ்டர்ஸ் தடகள சாம்பியன்ஷிப் நடைபெற்றது. இதில் சவாங் ஜான்பிரம் (Sawang Janpram) என்ற 102 வயது தாத்தா ஒருவர் பங்கேற்று இருக்கிறார். இந்த சேம்பியன்ஷிப் போட்டியில் நடத்தப்பட்ட 100 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் கலந்துகொண்ட இந்த தாத்தா பந்தய தூரத்தை 27.08 நொடிகளில் கடந்து புதிய சாதனையை படைத்திருக்கிறார். 100 வயதிற்கு மேற்பட்ட தடகள வீரர்களில் இது சாதனையாக கருதப்படுகிறது.
இது குறித்துப் பேசிய சவாங்,"விளையாட்டில் ஈடுபடுவது என்னை வலுவாகவும், ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்ள உதவுகிறது. அதோடு பயிற்சி செய்வது பசியை தூண்டுகிறது. அதனால் நன்றாக சாப்பிடவும் முடியும் ”எனச் சொல்லி இருக்கிறார்.
4 ஆண்டுகள்
அதுமட்டுமல்லாமல் 100 முதல் 105 வயதினருக்கு இடையேயான அனைத்து போட்டிகளிலும் கலந்துகொண்டு சவாங் தங்க பதக்கத்தை பெற்று அசத்தி இருக்கிறார். தாய்லாந்தில் வருடந்தோறும் நடத்தப்படும் இந்த வயதானவர்களுக்கான தடகள போட்டியில் கடந்த நான்கு வருடங்களாக இவர் கலந்துகொள்கிறாராம். மேலும், ஓட்டம், வட்டு எறிதல் மற்றும் ஈட்டி எறிதல் ஆகிய போட்டிகளில் இவர் பங்கேற்று இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பயிற்சி
இந்த போட்டியில் பங்கேற்பதற்காக போட்டி துவங்குவதற்கு ஒரு வாரத்திற்கு முன்னர் இரண்டு நாட்களுக்கு ஒருமுறை தனது 70 வயதான மகளுடன் பயிற்சியில் ஈடுபட்டு வந்ததாகச் சொல்கிறார் சவாங். தினமும் உடற்பயிற்சி செய்வது, வீட்டில் உள்ள மரங்களில் இருந்து உதிரும் இலைகளை சேகரித்து அப்புறப்படுத்துவது என எப்போதும் துருதுருவென்று இருக்கும் சவாங் நிஜமாகவே இளைய தலைமுறையினருக்கு ஒரு எடுத்துக்காட்டுத்தான்.
Sawang Janpram, 102, broke the Thai 100m record – for centenarians – at the annual Thailand Master Athletes Championships https://t.co/GZcaQGrAoR pic.twitter.com/OxqGLiXySI
— Reuters (@Reuters) March 3, 2022
ஒரே வருஷம் தான்.. பணம் டபுள் ஆகிடும்.. நம்பிப்போன பெண்ணிற்கு நடந்த சோகம்..!