வாட்சப்பின் புதிய அப்டேட்.. தப்பு பண்ணா இனி யாரும் தப்ப முடியாது.. ஒரே புகார்ல மொத்தமும் குளோஸ் ஆகிடும் போலயே..!
முகப்பு > செய்திகள் > தொழில்நுட்பம்பாதுகாப்பு மற்றும் தனிப்பட்ட உரிமைகளை பாதுகாக்கும் வகையில் வாட்ஸாப் புதிய அப்டேட்டை கொண்டுவர இருக்கிறது. இதனால் வாட்ஸாப் பயன்பாட்டாளர்கள் மிகுந்த சந்தோஷத்தில் உள்ளனர்.
இந்தியாவில் அதிகம் பயன்படுத்தப்படும் செயலிகளில் முன்னணியில் இருக்கும் வாட்ஸாப் செயலியானது ஸ்மார்ட்ஃபோன்களில் ஆண்ட்ராய்டு ஐஓஎஸ் என இரண்டு இயங்கு தளங்களிலும் இயங்கி வருகிறது. மேலும் தனிப்பட்ட எண்ட்-டு-எண்ட் எனப்படும் இரு நபர்களுக்கிடையே பரிமாறிக் கொள்ளப்படும் தகவல்களை பாதுகாப்பாக வைத்துக் கொள்வதற்கான வசதியும் இதில் இருக்கிறது. இதன் காரணமாகவே வாட்சாப்பை பலரும் பயன்படுத்தி வருகின்றனர்.
பயனாளர்களின் பாதுகாப்பு மற்றும் தனி உரிமைகளை பாதுகாக்க வாட்ஸாப் நிறுவனம் அவ்வப்போது அப்டேட்களை கொடுத்துக்கொண்டே இருக்கிறது. அந்த வகையில் தற்போது புதிய அப்டேட் ஒன்று வர இருக்கிறது. இதன் மூலம், வன்முறை மற்றும் ஆபாசமான முறையில் ஸ்டேட்டஸ் வைப்பவர்கள் குறித்து நேரடியாக புகார் அளிக்கலாம் என வாட்ஸாப் நிறுவனத்தின் தாய் நிறுவனமான மெட்டா தெரிவித்திருக்கிறது.
அதாவது, பயனர் ஒருவர் தனது வாட்ஸாப்பில் அவதூறு பரப்பும் விதமாகவோ அல்லது வன்முறையை தூண்டும் விதமாகவோ ஸ்டேட்டஸ் வைத்தால் இந்த புதிய அப்டேட் மூலமாக அதுகுறித்து நாம் புகார் அளிக்கலாம் என மெட்டா நிறுவனம் அறிவித்திருக்கிறது. அதேபோல, தனிநபர்களை பற்றி அவதூறாக பேசுவது பெண்களை தவறாக சித்தரிப்பது போன்ற ஸ்டேட்டஸ்களை வைப்போர் மீதும் புகார் அளிக்கலாம் என மெட்டா நிறுவனம் தெரிவித்திருக்கிறது.
முன்னதாக, பேஸ்புக் தளத்தில் இதே வசதி அறிமுகப்படுத்தப்பட்டது. பேஸ்புக் விதிமுறைகளை மீறுவோர் மீது சக பயனர்கள் புகார் அளிக்கும் பட்சத்தில் அதுகுறித்து பேஸ்புக் நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வந்தது. இந்நிலையில், இதே வசதியை தற்போது வாட்ஸாப்பிலும் அறிமுகப்படுத்த உள்ளது மெட்டா. இதனால் வாட்ஸாப் பயனர்கள் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர்.