விண்வெளிக்கு நிர்வாணப் படங்களை அனுப்பும் நாசா? எதற்காக தெரியுமா? – சுவாரஸ்ய பின்னணி!
முகப்பு > செய்திகள் > உலகம்விண்வெளியில் உள்ள ஏலியன்களோடு தொடர்பு கொள்ள நாசா வித்தியாசமான இரண்டு புகைப்படங்களை அனுப்ப உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஏலியன்கள்…
ஏலியன்கள் என சொல்லப்படும் வேற்று கிரக வாசிகள் பற்றி நிறைய கருத்துகள் அறிவியல் உலகில் சொல்லப்பட்டு வருகின்றன. இது சம்மந்தமான திரைப்படங்கள் மற்றும் நாவல்கள் என கலையுலகிலும் நிறைய புனைவுகள் உருவாக்கப்பட்டு, ரசிகர்களால் அதிகம் ரசிக்கப்படுபவையாகவும் மாறியுள்ளன. ஆனால் இதுவரை வேற்று கிரகவாசிகள் பற்றிய ஆதாரப்பூர்வமான நிரூபணம் எதுவும் கிடைக்கவில்லை.
நிர்வாணப் புகைப்படம் அனுப்பும் நாசா…?
இந்நிலையில் ஏலியன்கள் பற்றிய ஆராய்ச்சியில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் நாசா தற்போது ஒரு புதிய வித்தியாசமான முயற்சியை மேற்கொள்ள உள்ளதாக சொல்லப்படுகிறது. வேற்றுகிரகவாசிகளை ஈர்க்கும் நோக்கில் விஞ்ஞானிகள் குழு ஒன்று நிர்வாணமான ஆண் மற்றும் பெண் புகைப்படங்களை விண்வெளிக்கு அனுப்ப உள்ளதாக சொல்லப்படுகிறது.
150 ஆண்டுகளுக்கும் மேலாக பலனளிக்காத வேற்றுகிரகவாசிகளுடன் தொடர்பு கொள்ளும் முயற்சியில் ஒரு புதிய வழியாக இந்த புகைப்படங்கள் அனுப்பும் திட்டத்தை விஞ்ஞானிகள் கருதுவதாக சொல்லப்படுகிறது. மறைந்திருக்கும் வேற்றுகிரகவாசிகளைக் கவர இந்த படங்கள் உதவும் என நாசாவின் விஞ்ஞானிகள் நம்புகின்றனர். இரண்டு நிர்வாண மனிதர்களை விண்வெளியில் சித்தரிக்கும் விளக்கப்படத்தை வெளியிட விஞ்ஞானிகள் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
.
Beacon in the Galaxy…
இப்படி புகைப்படங்களை அனுப்புவது நாசாவின் ’Beacon in the Galaxy” என்ற திட்டத்தின் ஒரு பகுதியாக சொல்லப்படுகிறது. விஞ்ஞானிகள் அனுப்ப உள்ள இரு படங்களில் முழு நிர்வாணமாக ஆண் மற்றும் பெண்ணின் உருவங்கள் கைகளை உயர்த்தி ‘ஹலோ’ சொல்லும் விதமாக இருக்கும் என சொல்லப்படுகிறது. காலப்பயணம் போன்று ஏலியன்கள் பற்றிய கருத்துகள் மனிதர்களுக்கு மிகவும் சுவாரஸ்யமான ஒன்றாக இருந்தாலும், இதுவரை அந்த இரு துறைகளிலும் நம்பும்படியான ஆதாரங்கள் இல்லாத நிலையில் இந்த புதிய முயற்சி விஞ்ஞானிகளுக்கு ஏதாவது ஒரு வகையில் பயனளிக்குமா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.
8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். https://behindwoods.com/bgm8