'கை, கால்களில் சானிடைஸருடன்'.. 'கணவருக்கு டீ போட அடுப்பைப் பற்றவைத்த மனைவி'.. 'ஒரு நொடியில்' நடந்தேறிய 'சோக' சம்பவம்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்விருதுநகர் மாவட்டம், திருச் சுழி நந்தவனம் தெருவைச் சேர்ந்த 38 வயதான சோலைராஜ், பனைகுடி டாஸ்மாக் கடையில் மேற்பார்வையாளராக இருந்து வருகிறார். இவரது மனைவி 36 வயதான சோலையம்மாள், காத்தான்பட்டி கிராம உதவி யாளராக பணியில் இருந்து வந்தார்.

இவர்களுக்கு குரு பிரசன்னா (12) என்ற மகனும், சோலை (9) என்ற மகளும் உள்ள நிலையில், கடந்த 28-ம் தேதி வீட்டிலிருந்த சோலைராஜ் மனைவியிடம் டீ கேட்க, கணவருக்காக டீ போடும் முன், கைகள் மற்றும் கால்களில் சானிடைசர் தடவியிருந்த சோலையம்மாள் அப்படியே சென்று அடுப்பை பற்ற வைத்துள்ளார்.
அந்த சமயத்தில் திடீரென சோலையம்மாள் மீது சற்றும் எதிர்பாராத விதமாக தீப்பற்றியதுடன், உடல் முழுவதும் பரவியது. இதனைப் பார்த்த சோலைராஜ் செய்வதறியாது தவித்ததுடன், தண்ணீர் ஊற்றி தீயையும் அணைத்தார். ஆனால் அதற்குள் பலத்த தீக்காயம் அடைந்த சோலையம்மாளை, திருச்சுழி அரசு மருத்துவமனை சோலைராஜ் சேர்த்தார்.
அங்கு சிகிச்சைப் பலனின்றி சோலையம்மாள் உயிரிழந்ததை அடுத்து, இதுகுறித்து திருச்சுழி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மற்ற செய்திகள்
