திருமண பந்தத்தில் நுழையும் 'கேப்டன்' மகன்.. வைரலாகும் 'நிச்சயதார்த்த' புகைப்படங்கள்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Manjula | Dec 07, 2019 04:46 PM

நடிகரும், தேமுதிக கட்சியின் தலைவருமான விஜயகாந்துக்கு விஜய பிரபாகரன், சண்முக பாண்டியன் என 2 மகன்கள் உள்ளனர். இதில் விஜய பிரபாகரன் விரைவில் திருமண பந்தத்தில் நுழையவிருக்கிறார்.

Vijayakanth\'s son Vijaya Prabhakaran gets engaged, Details

கோவை மாவட்டம் பெரிய நாயக்கன் பாளையத்தை சேர்ந்தவர் தொழிலதிபர் இளங்கோ. இவரது மகள் கீர்த்தனா. இவருக்கும் தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரனுக்கும் திருமணம் பேசி முடிக்கப்பட்டுள்ளது. கோவை சிங்காநல்லூரில் வைத்து விஜய பிரபாகரனுக்கும்-கீர்த்தனாவுக்கும் சமீபத்தில் நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது.

இதில் இரு வீட்டாரின் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.  நிச்சயதார்த்தத்தின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது வெளியாகி இருக்கின்றன. புகைப்படங்களை பார்த்த விஜயகாந்தின் ரசிகர்கள் நிச்சயதார்த்த தம்பதியை மனதார வாழ்த்தி வருகின்றனர். இந்த நிகழ்வில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : #VIJAYAKANTH