‘ஒரு மணப் பொண்ணு இருந்தா 10 பேர் வந்து கேப்பாங்கதான்’: பிரேமலதா விஜயகாந்த்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Siva Sankar | Mar 08, 2019 02:22 PM

நாடாளுமன்ற தேர்தலில் தேமுதிக-வின் நிலைப்பாடு குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு ஓரிரு நாட்களில் வெளியாகும் என தேமுதிக-வின் பொருளாளர் பிரேமலதா கூறியுள்ளார்.

DMDK Trustee Premalatha vijayakanth recent press meet

முன்னதாக மகளிர் தினத்துக்கு தங்கள் கட்சி சார்பாக வாழ்த்துக்களைத் தெரிவித்தவர், தேமுதிகவின் கூட்டணி பேச்சுவார்த்தைகளில் எவ்வித இழுபறியும் இல்லை என்று கூறினார்.ராணுவ கட்டுப்பாடுகள் கொண்ட கட்சிதான் தே.மு.தி.க என்றும் தமிழக மக்கள் 100 சதவீதம் தே.மு.தி.க மீது தமிழக மக்கள் வைத்துள்ள நம்பிக்கையை யாராலும் சீர்குலைக்க முடியாது என்றும் பதிலளித்தார்.

மேலும் ஒரு மணப்பெண் இருந்தால் 10 பேர் வந்து பெண் கேட்கத்தான் செய்வார்கள்.  தேர்தல் நேரத்தில் எல்லா கட்சியும் கூட்டணி வைக்கத்தான் செய்வார்கள். அது தலைமையின் முடிவுதான். தமிழ்நாட்டில் எல்லாரும்தான் கூட்டணி வைத்துக்கொள்கிறார்கள். ஆனால் விஜயகாந்த் ஜெயலலிதா இருக்கும்போதே தனித்து நின்று வெற்றிபெற்ற மரபை உருவாக்கியவர் என்றும், கூட்டணி வைப்பதால் கொள்கை இல்லை என்று  சொல்லிவிட முடியாது என்றும் கூறியுள்ளார்.

மேலும் பிரேமலதா, பத்திரிகையாளர்களை நீ, வா, போ என ஒருமையில் பேசியதால் பத்திரிகையாளர் சந்திப்பில் சலசலப்பு எற்பட்டது குறிப்பிடத்தக்கது.

Tags : #DMDK #PREMALATHA #VIJAYAKANTH