VIDEO: ‘DK அண்ணா.. DK அண்ணா’!.. இங்கிலாந்து மண்ணில் கேட்ட தமிழ்.. சட்டென திரும்பி தினேஷ் கார்த்திக் சொன்ன விஷயம்.. ‘செம’ வைரல்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஉலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் ரசிகர்களுடன் தினேஷ் கார்த்திக் தமிழில் பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்தியா மற்றும் நியூஸிலாந்துக்கு இடையேயான டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி இங்கிலாந்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. முதல் நாள் ஆட்டம் மழையால் தடைப்பட்டது. அதனால் இரண்டாம் நாளில் இருந்து போட்டி தொடங்கியது. இதில் டாஸ் வென்ற நியூஸிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 217 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதில் அதிகபட்சமாக ரஹானே 49 ரன்களும், கேப்டன் விராட் கோலி 44 ரன்களும் எடுத்தனர். நியூஸிலாந்து அணியைப் பொறுத்தவரை வேகப்பந்து வீச்சாளர் கெயில் ஜேமிசன் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.
இந்த நிலையில் டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு வர்ணனையாளராக சென்றிருக்கும் தமிழக கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக், தனது கமெண்டரி மூலம் இணையத்தில் அடிக்கடி டிரெண்டாகி வருகிறார். அந்த வகையில் இந்திய அணி பேட்டிங் செய்தபோது சக வர்ணனையாளர் நாசர் ஹுசைன், ஷார்ட் பந்தை அடிப்பதில் ரோஹித் ஷர்மா சிறந்தவர் என்றும், சூழலுக்கு ஏற்ற மாதிரி தனது கால்களை நன்றாக பயன்படுத்துகிறார் என்றும் தெரிவித்திருந்தார். உடனே, ‘ஆமாம் அப்படியே உங்களுக்கு நேர் எதிராக விளையாடுகிறார்’ என அவரை தினேஷ் கார்த்திக் கலாய்த்தார். இது அப்போது இணையத்தில் வெளியாகி வைரலானது.
அதேபோல், மைதானத்தில் ரசிகர்களிடம் தமிழில் பேசிய தினேஷ் கார்த்திக் வீடியோ தற்போது இணையத்தில் கவனம் பெற்று வருகிறது. தமிழகத்தை சேர்ந்த ரசிகர்கள் சிலர் டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியை காண சவுத்தாம்ப்டன் மைதானத்துக்கு சென்றுள்ளனர். அப்போது பால்கனியில் நின்றிருந்த தினேஷ் கார்த்திக்கைப் பார்த்த அவர்கள், ‘DK அண்ணா.. DK அண்ணா..’ என அழைத்தனர். இங்கிலாந்து மண்ணில் தமிழ் மொழியை கேட்டதும் உடனேயே திரும்பிப் பார்த்த தினேஷ் கார்த்திக், ‘நல்லா இருக்கீங்களா, மழை வருது இங்க என்ன செய்றீங்க, வீட்டுக்கு போங்க’ என கூறினார்.
Dinesh Karthik speaking tamil with Tamil fans from the balcony! 😍🔥 #WTCFinals #INDvNZ pic.twitter.com/D0pyd1cPYl
— Cricket lover(Msdian) (@criccrazylover) June 20, 2021
சர்வதேச கிரிக்கெட் தொடர்களில் விளையாடும் போதும், ஐபிஎல் போட்டியின் போதும் சக தமிழக வீரர்களிடம் தினேஷ் கார்த்திக் தமிழில் பேசுவது வழக்கம். அதில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியில் விளையாடி வரும் சக தமிழக வீரர் வருண் சக்கரவர்த்தியிடம், தினேஷ் கார்த்திக் தமிழில் பேசும் பல வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்
