கணீர் குரலால் தமிழ் இல்லங்களில் எதிரொலித்த சண்முகம் மறைவு!.. முதல்வர் ஸ்டாலின் இரங்கல்

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By K Sivasankar | Sep 11, 2022 01:12 PM

டிவி நிகழ்ச்சி தொகுப்பாளராக, தமக்கே உரிய கணீர் குரலால் தமிழ் இல்லங்களில் எதிரொலித்தது பிரபல தொகுப்பாளர் சண்முகம், இவர் உடல்நலக்குறைவால் மரணமடைந்துள்ளார்.

CM MK Stalin Condolence to TV News Anchor Shanmugam

90களில் சன் டிவியில் சிறப்புப் பார்வை எனும் பிரிவில் ஒளிபரப்பாகும் செய்தித் தொகுப்பில், தனது கணீர் குரலில் பொறுமையாக செய்தியை விளக்கி வாய்ஸ் ஓவர் கொடுத்தவர் பத்திரிகையாளர் சண்முகம். தமக்கே உரிய அழகிய தமிழ் உச்சரிப்பின் மூலம் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் இவரது குரலுக்காகவே 90ஸ் கிட்ஸ் அரைமணி நேர செய்தியில் வரும் 5 நிமிட சிறப்புப்பார்வைக்காக காத்திருந்து பார்த்தது உண்டு.

பத்திரிக்கை நிருபராக தனது ஊடக பணியை தொடங்கிய இவர், மதுரையை பூர்விகமாக கொண்டவர். பின்னர் தொடர்ந்து செய்தி வாசிப்பாளராகவும், நிகழ்ச்சித் தொகுப்பாளராகவும் பணியில் இருந்த இவர், பின்னர் அதில் இருந்து விலகி சில காலங்களாக பேச்சாளராக செயலாற்றி வந்தார்.  இந்நிலையில்தான், உடல்நலக்குறைவால் இவர் மரணமடைந்துள்ளார்.

இவரது மறைவுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் விடுத்துள்ளார். இது தொடர்பாக, மு.க.ஸ்டாலின் தமது செய்திக்குறிப்பில்,  “தனது தனித்த குரல்வளத்தால் தமிழ் இல்லங்கள் தோறும் எதிரொலித்த ஊடகவியலாளர் . சண்முகம் உடல்நலக்குறைவால் மறைவுற்றார் என்ற செய்தியறிந்து மிகுந்த துயருற்றேன். கால் நூற்றாண்டுக்கும் மேலான தனது ஊடகப் பயணத்தில், கணீர் குரல் - ஒழுங்கான வாசிப்பு - துல்லியமான உச்சரிப்பு என்று, செய்தி வாசிப்பில் அவர் இலக்கணமாய்த் திகழ்ந்தார் என்றே சொல்ல வேண்டும்.

அவரது மறைவு ஊடக உலகிற்குப் பேரிழிப்பு. அவரது பிரிவால் வாடும் ஊடக நண்பர்கள், அவரது குடும்பத்தினர், உறவினர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

Tags : #MKSTALIN #SHANMUGAM

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. CM MK Stalin Condolence to TV News Anchor Shanmugam | Tamil Nadu News.