"ஒரு பெண்ணை அவமதிக்கிறார்கள்".. நடிகை குஷ்புவின் ட்வீட்.. வருத்தம் தெரிவித்த MP கனிமொழி.. முழு விவரம்..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்நடிகையும் பாரதிய ஜனதா கட்சியின் பிரமுகருமான குஷ்பு செய்திருந்த ட்வீட்டிற்கு MP கனிமொழி வருத்தம் தெரிவித்திருக்கிறார்
![Kanimozhi reply to Kushboo Tweet over party member speech Kanimozhi reply to Kushboo Tweet over party member speech](http://tamil.behindwoods.com/news-shots-tamil-news/images/tamilnadu/kanimozhi-reply-to-kushboo-tweet-over-party-member-speech.jpg)
அண்மையில் ஒருவர் பெண்களை குறித்து பேசியதை குறிப்பிட்டு நடிகை குஷ்பு ட்வீட் செய்திருந்தார். அதில், பெண்ணை ஒரு ஆண் அவமதிக்கிறார் என்றால் அவர் வளர்ந்த நச்சு மிகுந்த சூழ்நிலையையே அது காட்டுகிறது. இத்தகையவர்கள் கலைஞரை பின்பற்றுபவர்கள் என தங்களை அழைத்துக்கொள்கிறார்கள் என குறிப்பிட்டு இருந்தார்.
இந்நிலையில், இந்த ட்வீட்டிற்கு பதில் அளித்துள்ள திமுக எம்பி கனிமொழி வருத்தம் தெரிவிப்பதாக குறிப்பிட்டுள்ளார். குஷ்பு தனது ட்விட்டர் செய்தியில்,"ஆண்கள் பெண்களை அவமதிப்பு செய்தால், அது அவர்கள் வளர்த்த விதமான வளர்ப்பையும், அவர்கள் வளர்ந்த நச்சு சூழலையும் காட்டுகிறது. இந்த ஆண்கள் ஒரு பெண்ணின் கருப்பையை அவமதிக்கிறார்கள். அத்தகைய ஆண்கள் தங்களை கலைஞரின் பின்பற்றுபவர்கள் என்று அழைத்துக்கொள்கிறார்கள். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையின் கீழ் இதுதான் புதிய திராவிடமா?" எனக் கேள்வி எழுப்பி இருந்தார். மேலும், எம்பி கனிமொழியையும் அவர் டேக் செய்திருந்தார்.
இந்நிலையில் இதற்கு பதில் அளித்துள்ள எம்பி கனிமொழி தனது ட்விட்டர் பக்கத்தில்,"ஒரு பெண்ணாகவும், மனிதனாகவும் நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். யார் செய்தாலும், சொல்லப்பட்ட இடம் அல்லது அவர்கள் கடைபிடிக்கும் கட்சி எதுவாக இருந்தாலும் இதை ஒருபோதும் பொறுத்துக்கொள்ள முடியாது. திமுக இதை பொறுத்துக்கொள்ளாது. இதற்காக எனது தலைவர் ஸ்டாலின் மற்றும் அறிவாலயம் சார்பாக நான் மன்னிப்பு கோருகிறேன்" எனக் குறிப்பிட்டிருந்தார்.
இதனையடுத்து எம்பி கனிமொழியின் இந்த ட்வீட்டிற்கு நடிகை குஷ்பு நன்றி தெரிவித்திருக்கிறார். அதில் குஷ்பு,"மிக்க நன்றி கனி. உங்கள் நிலைப்பாட்டையும் ஆதரவையும் உண்மையிலேயே பாராட்டுகிறேன். நீங்கள் பெண்களின் கண்ணியம் மற்றும் சுயமரியாதைக்காக எப்போதும் துணை நிற்கும் ஒருவராக இருந்திருக்கிறீர்கள்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
![](https://www.behindwoods.com/images/spacer.gif)
மற்ற செய்திகள்
![](https://www.behindwoods.com/images/spacer.gif)