‘என்னய்யா ஒரே மர்மமா இருக்கு’.. தானாக பின்னால் வந்த சைக்கிள் ரிக்சா.. திகில் வீடியோ..!
முகப்பு > செய்திகள் > ஃபன் பேக்ட்ஸ்சைக்கிள் ரிக்சா ஒன்று தானாக சாலையில் சென்று பின் மீண்டும் அதே இடத்தில் திரும்பி வந்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Also Read | “நம்பவே முடியல.. நேர்ல வந்த மாதிரியே இருக்கு”.. கல்யாண மண்டபத்தில் நடந்த நெகிழ்ச்சி..!
போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலை ஒன்றில் வாகனங்கள் வேகமாக சென்று கொண்டிருந்தன. அப்போது வீசும் காற்றில் சாலையோரம் நின்று கொண்டிருந்த ரிக்சா ஒன்று தானாக நகர்ந்து சாலையின் குறுக்கே சென்றது.
மீண்டும் பின்னர் காற்றின் திசை மாறுதல் காரணமாக மீண்டும் பின்னோக்கி நகர்ந்து அதே இடத்தில் வந்து நின்றது. ஆனால் அந்த ரிக்சாவில் மனிதர்கள் யாரும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Limon Sarker என்பவர் இணையத்தில் பதிவிட்ட இந்த வீடியோ வைரலாகி வருகிறது. நெட்டிசன்கள் பலரும் இது ஏதும் அமானுஷ்ய விஷயமா? என கேள்வி எழுப்பி வருகின்றனர். சிலர் மழை பெய்தபோது வீசிய காற்றின் காரணமாக இவ்வாறு நடந்திருக்கலாம் என்று கருத்து தெரிவித்துள்ளனர்.

மற்ற செய்திகள்
