“இருக்கு... இந்தியாவுல 25 பேருக்கு கோவிட்-19 எனும் கொரோனா இருக்கு.. குறிப்பா..!”.. உறுதிப்படுத்திய சுகாதார அமைச்சர்!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Siva Sankar | Mar 04, 2020 01:27 PM

மத்திய சுகதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் கோவிட்-19 என்று சொல்லப்படும் கொரோனா வைரஸ் தொற்று 25 பேருக்கு இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

COVID19india Corona virus Reaches Delhi corona virus india, harshvardh

இவர்களுள் அனைவருமே இந்தியர்கள் கிடையாது என்பதும், இவர்களுள் இத்தாலியில் இருந்து சுற்றுலாவுக்கு வந்த ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதியானதை அடுத்து, அவருடன் பயணம் செய்த 17 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பதும் தெரியவந்தது. அவர்களுக்கு டிரைவராக வந்த இந்தியருக்கும் கொரோனா வைரஸ் தொற்றியது.

இந்நிலையில் மத்திய சுகதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் கோவிட்-19 என்று சொல்லப்படும் கொரோனா வைரஸ் தொற்று 25 பேருக்கு இருப்பதாகவும், இவர்களுள் ஆக்ராவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேருக்கு கொரோனா தொற்று இருப்பதாகவும் உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். ஏற்கனவே 3 பேர் கேரளாவில் பாதிக்கப்பட்டதை அடுத்து சிகிச்சை அளிக்கப்பட்டு, அவர்கள் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டிருந்தனர். பின்னர் அவர்கள் வீடு திரும்பினர் என்றும் அவர் கூறினார்.

Tags : #CORONAVIRUSREACHESDELHI #CORONAVIRUSINDIA #COVID19INDIA