“பத்திரமா இருங்க... இந்த டைமும் இதுல இருந்து”... கொரோனா உறுதியானதால் கவிஞர் மனுஷ்யபுத்திரன் உருக்கமான பதிவு!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழகத்தில் 1 லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் குணமாகியுள்ள சூழ்நிலையில், தற்போது 47 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதனிடையே திரைப் பிரபலங்கள், அரசியல் பிரபலங்கள் என பலருக்கும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டு வருகிறது. அவ்வகையில் தமிழ் எழுத்தாளரும், பதிப்பாளரும், கவிஞருமான மனுஷ்ய புத்திரனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுபற்றி தனது சமூக பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், “வருத்தமான செய்தி, எனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளேன். யாருக்கும் சொல்ல வேண்டாம் என்றுதான் நினைத்தேன். அதற்குள் எப்படியோ வாட்ஸ்அப் குரூப்களில் செய்தி பரவ ஆரம்பித்து நண்பர்கள் பலரும் கவலையுடன் என்னை தொடர்பு கொண்டு விசாரிக்க ஆரம்பித்துவிட்டனர்.
அதனால் பொதுவில் இதை பகிர்கிறேன். மிகவும் கவனமாக இருந்தும் எப்படி வந்தது என்றே தெரியவில்லை. 4 நாட்களாக தொடர்ந்து காய்ச்சல் இருந்ததால், சந்தேகப்பட்டு பரிசோதனை மேற்கொண்டதில், கொரோனா பாசிட்டிவ் என்று ரிசல்ட் வந்துவிட்டது.
அண்மையில்தான் இருதய அறுவை சிகிச்சை செய்தேன். அதனால் மருத்துவமனை கண்காணிப்பில் இருப்பது அவசியம் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியதால் ஹாஸ்பிடலில் அட்மிட் ஆகியுள்ளேன். நீங்களும் பத்திரமாக இருங்கள் இம்முறையும் மீண்டு வந்து விடுவேன் என்று நம்புகிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.

மற்ற செய்திகள்
