இந்த காரணத்தை சொல்லியே நிறைய பேர் இ-பதிவு செய்றீங்க..! திருமண ‘இ-பதிவு’-ல் அதிரடி மாற்றம்.. இனி அவங்க மட்டும்தான் அப்ளை பண்ண முடியும்..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்திருமணத்துக்கு செல்வதற்கான இ-பதிவு முறையில் புதிய நடைமுறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் மக்கள் அதிகளவில் வெளியில் சுற்று வருகின்றனர். இதனால் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல, மாவட்டத்திற்கு உள்ளே செல்ல இ-பதிவு முறையை தமிழக அரசு அமல்படுத்தியது.
இந்த இ-பதிவு முறையில் முதலில் திருமணத்துக்குக்கான ஆப்ஷன் இடம்பெற்றிருந்தது. ஆனால் மக்கள் அதிகளவில் இந்த காரணத்தை கூறி இ-பதிவு செய்ததால், திருமணத்துக்கான அனுமதி நீக்கப்பட்டு, பின்னர் சேர்க்கப்பட்டது. இந்த நிலையில் திருமணத்துக்காக இ-பதிவு செய்வதில் புதிய நடமுறைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில்,
1. திருமணத்துக்கு செல்ல இ-பதிவு செய்யவேண்டுமானால் திருமண அழைப்பிதல் கட்டாயம் வேண்டும். அதை இணையத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
2. திருமண அழைப்பிதழில் பெயர் இடம் பெற்றுள்ளவர்கள் மட்டுமே இ-பதிவு செய்ய முடியும்.
3. மணமகன், மணகள், பெற்றோர் ஆகியோரில் ஒருவர் பெயரில் மட்டுமே இ-பதிவு செய்ய வேண்டும்.
4. ஒரு திருமண நிகழ்விற்கு ஒரே ஒரு முறை மட்டுமே இ-பதிவு செய்ய இயலும்.
5. வாகனங்களின் பதிவு எண், ஆதார் எண், லைசென்ஸ், செல்போன் எண் கட்டாயம்.
6. திருமணத்திற்கு வரும் அனைவருக்கும் சேர்த்து ஒரே இ-பதிவு.
7. தவறான தகவல், பலமுறை பயன்படுத்தினாலும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.