தங்கச்சிக்கு கல்யாணம்.. பாசத்தை பங்கு போட்ட அண்ணன்கள்! பந்தியில் உட்கார்ந்தவருக்கு மட்டுமல்ல.. பார்த்தவங்களுக்கும் நிறைஞ்சுருக்கும் மனசு! வீடியோ
முகப்பு > செய்திகள் > இந்தியாடெல்லி: சின்னத்தம்பி, பாசமலர், முள்ளும் மலரும் படத்தை மிஞ்சிய அண்ணன் தங்கை பாசம் பலரையும் நெகிழ்ச்சியடைய வைத்துள்ளது. நம் வாழும் ஊரில் அல்லது நம் தெருவில், யாரேனும் அண்ணன் தங்கையும் அவர்களின் பாசத்தையும் கிண்டலாகச் சொல்லவேண்டுமெனில், பெரிய பாசமலர் சிவாஜி, சாவித்திரினு நினைப்பு என்றுதான் சொல்லுவோம். எங்கோ ஒரு தருணத்தில், அண்ணாவுக்காக தங்கையோ, தங்கைக்காக அண்ணனோ விட்டுக்கொடுக்கிற தருணங்களில், ஆஹா... பாசமலர் படம் பாக்குற மாதிரியே இருக்கு பங்கு கேலியும் கிண்டலுமாக பேசுவோம்.

மனித உறவை பிரிவுப்படுத்த முடியாத ஒரு அன்பு இருக்குமெனில் அண்ணன் தங்கை தான். தாய், தந்தை, தமக்கை, தோழியென பல அன்பின் அருவிகள் கொட்டினாலும், சகோதர உணர்வென்பது அனைத்தையும் விஞ்சி நிற்கும். மனம் கொத்தி பறவை படத்தில் சூரி ஒரு பெண்ணிடம் காதலை சொல்ல செல்லும்போது, உனக்கு எத்தனை அண்ணன்கள் 6 பேர் என்றதும் இனிமே உனக்கு 7 அண்ணன்கள் என்னையும் சேர்த்து என்று கூறி வருவது நகைச்சுவையாக இருக்கும்.
திருப்பாச்சி படத்தில் இளைய தளபதி விஜய், தன் தங்கை மேல் அதீத பாசத்தோடு இருப்பார். அதேபோல் தங்கைகளின் மீது உயிரையே வைத்திருக்கும் அண்ணன்கள் இங்கு ஏராளம். அண்ணன்களுக்கு அம்மாவாக மாறிப்போகும் தங்கைகளும், தங்கைகளுக்கு அப்பாவாக மாறிப்போகும் அண்ணன்களும் இங்கு அதிகம். வளர்ந்த பின்பு தங்கள் தங்கைக்கு பார்த்து, பார்த்து வரன் தேடும் இடத்தில் அண்ணன்கள் அப்பா ஸ்தானத்தில் இருந்து மிளிர்கின்றனர். அண்ணன்களின் பாசம் அந்தவகையில் அளவிட முடியாது.
இங்கேயும் அப்படித்தான் அண்ணன்கள், தன் தங்கையின் மேல் உயிரையே வைத்திருக்கும் பாசம் இணையத்தில் மக்களை ரசிக்க வைத்துள்ளது. மணப்பெண் திருமணம் நடக்கும் இடத்திற்கு வரும்போது, தங்கைக்காக காத்திருந்த அண்ணன்கள் தனது கைகளை தரையில் வைத்து தங்கையின் கால்கள் தரையில் படாமல் இருக்க உள்ளங்கைகளால் தாங்கி செல்லும் காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது.
வண்ணப்பூக்களால் மலர் பாதை அமைத்து தங்கை நடந்து செல்வதை அண்ணன்கள் ரசித்தனர். சின்னத்தம்பி படத்தில் தங்கையான குஷ்பூவை தாங்கும் அண்ணன்களாக ராதாரவி இருக்கும் காட்சியை தமிழ்படம் நகைச்சுவையாக கலாய்த்திருப்பார்கள். அதே சம்பவம் டெல்லியில் நடந்திருக்கும் இந்த உணர்ச்சி மிகுந்த வீடியோ சமூகவலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.

மற்ற செய்திகள்
