எலெக்ஷன் ரிசல்ட்டை கேட்டு காங்கிரஸ் தலைவர் நெஞ்சுவலியில் உயிரிழப்பு..! சோகத்தில் தொண்டர்கள்..!
முகப்பு > செய்திகள் > இந்தியாBy Selvakumar | May 23, 2019 06:03 PM
மக்களவை தேர்தல் முடிவுகளை கேட்டு காங்கிரஸ் தலைவர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர் தொகுதி தவிர மொத்தம் உள்ள 543 தொகுதிகளில் 542 தொகுதிகளுக்கு தேர்தல் நடந்து முடிந்தது. இன்று காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை தொடங்கப்பட்டது. இதுவரை வெளியாகிய நிலவரப்படி பாஜக 300 -க்கும் அதிகமான தொகுதிகளில் முன்னிலை பெற்று வருகிறது.
இந்தியாவின் மற்றொரு பிராதன தேசிய கட்சியான காங்கிரஸ் அதிக தொகுதிகளில் பின்னடைவை சந்தித்து வருகிறது. ஆனால் தமிழகத்தில் திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் வேட்பாளர்களில் தேனி தொகுதில் போட்டியிட்ட ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் தவிர மற்ற வேட்பாளர்கள் முன்னிலை வகித்து வருகின்றனர். அதேபோல் கேரளா வயநாடு தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வெற்றி பெற்றுள்ளார். ஆனால் மற்ற மாநிலங்கள் பாஜக அதிக இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது.
இந்நிலையில் மத்திய பிரதேசத்தில் உள்ள போபாலில் சீஹோர் மாவட்டத்தில் காங்கிரஸ் தலைவர் ரத்தன் சிங் இன்று காலை வாக்கு எண்ணிக்கை குறித்த தகவலை அறித்து கொள்ள சென்றுள்ளார். ஆனால் பாஜக முன்னிலை வகிப்பதை அறிந்த அவர் நெஞ்சு வலியால் திடீரென மயங்கி விழுந்துள்ளார். உடனே அங்கிருந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே ரத்தன் சிங் உயிரிழந்துள்ளார். இது காங்கிரஸ் தொண்டர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
