"லாக்டவுனை நீட்டிக்கலாமா? வேணாமா? எப்படி இருக்கு கொரோனா? ".. தமிழக முதல்வரிடம் மருத்துவக் குழு பரிந்துரைத்தது இதுதான்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்மருத்துவ நிபுணர் குழுவுடன் தமிழக முதல்வர் பழனிசாமி நடத்திய ஆலோசனைக்கூட்டம் நிறைவு பெற்றுள்ளது. பல்வேறு விஷயங்களைப் பற்றி பேசிய இந்த கூட்டத்தில் ஊரடங்கு நீட்டிப்பது குறித்த முக்கிய முடிவு எடுக்கப்படலாம் என எதிர்ப்பார்க்கப்பட்டது.

இந்நிலையில் ஊரடங்கை நீட்டிக்க முதல்வரிடம் பரிந்துரைக்கவில்லை என மருத்துவக் குழுவினர் தெரிவித்துள்ளனர். இதுபற்றி சென்னையில் பேசிய ஐசிஎம்ஆர் மருத்துவக் குழு நிபுணர் பிரதீப் கவுர், சென்னை உள்பட தமிழகத்தின் பல மாவட்டங்களில் கொரோனா பரிசோதனை அதிகரிக்க வேண்டும் என்று ஆலோசனை வழங்கியுள்ளதாக தெரிவித்துள்ளார். இந்தியாவிலேயே அதிகம் கொரோனா பரிசோதனை செய்யும் மாநிலம் தமிழ்நாடுதான் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் சென்னையைப் போலவே திருச்சி, மதுரை, வேலூர், திருவண்ணாமலை போன்ற அடர்த்தியான மண்டலங்களில் கொரோனா பரிசோதனைகளை அதிகப்படுத்த வேண்டும் என்றும், கொரோனா இறப்பு விகிதம் குறைவாக இருப்பதாலும், 80 சதவீதம் பேர் லேசான அறிகுறிகளுடன் இருப்பதாலும், கொரொனா இரட்டிப்பாகும் வேகம் குறைந்துள்ளதாலும் மக்கள் பயப்பட தேவையில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
தவிர, பொதுமக்கள் சுவை, மணம் தெரியாமல் இருந்தாலோ, சளி, இருமள், மூச்சுத்திணறல் உள்ளிட்ட அறிகுறிகள் இருந்தாலோ தாமாக முன்வந்து பரிசோதனை செய்துகொள்ள வேண்டும், தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் பொதுமுடக்கத்தை நீட்டிப்பது தீர்வு கிடையாது,பொதுமக்களின் ஒத்துழைப்புதான் நோயில் இருந்து விடுபட வழி, பொது முடக்கத்தை நீட்டித்துக்கொண்டே இருக்க இயலாது என்கிற நடைமுறை எதார்த்தத்தை முதல்வருக்கு ஆலோசனையாக வழங்கியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

மற்ற செய்திகள்
