சைக்கிளில் அலுவலகத்துக்கு சென்ற திருவாரூர் கலெக்டர்.. கவனம் பெறும் போட்டோ.. என்ன காரணம்..?
முகப்பு > செய்திகள் > தமிழகம்சுற்றுச்சூழலை பாதுகாப்பதன் அவசியத்தை வலியுறுத்தி திருவாரூர் மாவட்ட ஆட்சியர் சைக்கிளில் அலுவலகத்துக்குச் சென்றார்.
காற்றுமாசை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மாசு கட்டுப்பாட்டு வாரியம் எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக அனைத்து அரசு மற்றும் ஒப்பந்த பணியாளர்கள் மாசற்ற அலுவலக நாளை கடைபிடிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி சுற்றுச்சூழலை பாதுகாக்க வாரத்திற்கு ஒரு முறை பொது ஊர்தி அல்லது மிதிவண்டியில் வர வேண்டும் என்று தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிவுறுத்தியுள்ளது.
அதனால் இன்று (23.12.2021) திருவாரூர் மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் தனது வீட்டிலிருந்து ஆட்சியர் அலுவலகத்திற்கு சைக்கிளில் வந்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
அதேபோல் கடந்த வாரம் நாகை மாவட்ட ஆட்சியர் அருண் தம்பு ராஜ் தனது இல்லத்திலிருந்து ஆட்சியர் அலுவலகத்திற்கு சைக்கிளில் பயணம் செய்தார்.
இதனைத் தொடர்ந்து அரியலூர் மாவட்ட ஆட்சியர் ரமண சரஸ்வதி தனது இல்லத்தில் இருந்து சுமார் அரை கிலோ மீட்டர் தூரம் நடந்தே ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்து விழிப்புணர்வை ஏற்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.