“6 மாதம் கழிச்சு திறக்கப்பட்ட ‘இரண்டு’ திரையரங்குகள்!”.. நாளொன்றுக்கு 3 காட்சிகள்! எங்க தெரியுமா?
முகப்பு > செய்திகள் > தமிழகம்திறக்கப்பட்டன இந்தியாவில் கொரோனா பரவலை தடுக்கும் விதமாக பொதுமுடக்கம் அமலில் இருந்ததால், ஆறு மாதங்களுக்கு மேலாக திரையரங்குகள் மூடப்பட்டிருந்த.
இந்நிலையில் நாடு முழுவதும் ஐந்தாம் கட்ட தளர்வுடன் கூடிய பொதுமுடக்கம் அமலுக்கு வந்தது. அதன் ஒரு பகுதியாக 50 சதவீத பார்வையாளர்களுடன் திரையரங்குகளை திறக்க மத்திய அரசு அனுமதி அளித்தது. இதனை அடுத்து புதுச்சேரியில் உள்ள இரண்டு திரையரங்குகளில் நாள் ஒன்றுக்கு மூன்று காட்சிகள் வீதம் திரைப்படங்கள் திரையிடப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா பரவலை தடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ள வழிகாட்டுதல்படி பார்வையாளர்களுக்கு வெப்பநிலை பரிசோதனை செய்யப்பட்ட பின்னரே அனுமதிக்கப்படுவதாகவும், திரையரங்கிற்கு வரும் பார்வையாளர்களுக்கு முகக்கவசம் மற்றும் சானிடைசர் வழங்கப்படுவதாகவும், இடைவெளிவிட்டு பார்வையாளர்கள் அமர அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.