"தமிழக பொது விநியோக இணையதளம் ஹேக்!.. 50 லட்சம் தமிழக மக்களின் ஆதார் விவரங்கள் லீக்"!.. தனியார் ஐடி நிறுவனம் திடுக்கிடும் தகவல்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்50 லட்சத்துக்கும் அதிகமான தமிழ்நாட்டு மக்கள் தொடர்பான தனிப்பட்ட தகவல்கள் ஹேக் செய்யப்படும் அபாயத்தில் இருப்பதாக திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளன.

தமிழக பொது விநியோக திட்ட விவரங்கள் ஹேக்கர்கள் மூலம் இணையத்தில் லீக் ஆகி உள்ளது. 49,19,668 பேரின் ஆதார் விவரங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது. இதனை டெக்னிசாங்க்ட் என்ற சைபர் செக்யூரிட்டி நிறுவனம் தெரிவித்து உள்ளது.
ஜூன் 28 அன்று இந்த ஆபத்தான ஹேக்கிங் நடந்ததாக டெக்னிசாங்க்ட் கூறுகிறது.
49,19,668 ஆதார் எண்களை உள்ளடக்கிய 52 லட்சம் பயனர் தரவை கசிய வைக்கும் இணைப்பு, பிரபல ஹேக்கர் இணையத்தில் ஜூன் 28 அன்று பதிவேற்றப்பட்டு உள்ளது. தரவுத்தளங்களை பகிர்ந்து கொண்ட ஒருவர். தனிநபர் அடையாளம் காணக்கூடிய தகவல் (பிஐஐ) மற்றும் குடிமக்களின் ஆதார் எண், பயனாளிகளின் விவரங்கள் மற்றும் அவர்களது உறவினர்களின் விவரங்கள் உள்ளிட்ட முக்கிய விவரங்கள் தரவு பகிர்வு தளத்தில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளதாக டெக்னிசான்ட் தெரிவித்துள்ளது.
tnpds.gov.in இணையதளம் சைபர் தாக்குதலுக்கு உள்ளானது மற்றும் 1945விஎன் என்ற பெயரில் செல்லும் ஒரு சைபர் கிரிமினல் குழுவால் ஹேக் செய்யப்பட்டதாக கூறப்பட்டு உள்ளது.
6.8 கோடிக்கும் அதிகமான பயனாளிகள் மற்றும் 6.7 கோடி ஆதார் இந்த குறிப்பிட்ட இணையதளத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டின் பொது விநியோக அமைப்பில் (பிடிஎஸ்) தரவு ஹேக் செய்யப்பட்டதை தொடர்ந்து 50 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் தொடர்பான தனிப்பட்ட தகவல்கள் ஆபத்தில் உள்ளன.
இது குறித்து, டெக்னிசாங்க்டின் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி நந்தகிஷோர் ஹரிகுமார் கூறும் போது, "எங்கள் குழு இந்த விதி மீறலின் ஆழத்தை மதிப்பீடு செய்து வருகிறது, ஆதார் பதிவுகளின் எண்ணிக்கையை பகிரங்கமாக அம்பலப்படுத்துகிறது. ஏனெனில் குடிமக்கள் மோசடிக்கு ஆளாகாமல் பாதுகாக்க வேண்டியது அவசியம்" என்று கூறினார்.

மற்ற செய்திகள்
