134 அடி உயரத்தில் கலைஞர் கருணாநிதி பேனாவுக்கு மெரினாவில் கடலுக்கு நடுவே நினைவு சின்னம்.. செலவு எம்புட்டு கோடி தெரியுமா?
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழகத்தின் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி கடந்த 2018 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 7 ஆம் தேதி மரணமடைந்தார்.
மெரினாவில் கடற்கரை ஓரத்தில் இவருக்கு சமாதி அமைக்கப்பட்டுள்ளது. மேலும் 2.23 ஏக்கர் பரப்பளவில் ₹39 கோடியில் தமிழக அரசு சார்பில் நினைவிடம் கட்டப்பட்டு வருகிறது.
இந்த நினைவகம் உதயசூரியன் வடிவத்தில் அமைக்கப்படும் என்றும் முகப்பில் பேனா வடிவம் அமைக்கப்படும் என்று தகவல்கள் ஏற்கனவே வெளியாகியுள்ளன.
இவரது நினைவு தினத்தை ஒட்டி பல்வேறு வகையான நிகழ்ச்சிகள் திமுக சார்பிலும் அரசு சார்பிலும் நடக்கும்.
இந்நிலையில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு மெரினா வங்க கடலில் 134 அடி உயரத்திற்கு பேனா வடிவில் நினைவுச் சின்னம் அமைக்க தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது.
மெரினா கடற்கரையில் கருணாநிதியின் நினைவிடத்தில் இருந்து 360 மீட்டர் தொலைவில் நடுக்கடலில் 134 அடி உயரத்திற்கு கடலினுள் ₹80 கோடி செலவில் பேனா வடிவ நினைவுச் சின்னம் ஒன்றை அமைக்கத் தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.
கடலில் பொது மக்கள் நடந்து சென்று இந்த நினைவு சின்னத்தை அடையும் வகையில் 650 மீட்டர் தூரத்துக்கு பாலம் அமைக்கப்படும் என்றும்,
இந்த பாலம் நிலத்தின் மீது 290 மீட்டரும், கடலின் மீது 360 மீட்டர் அமையும் வகையில் கட்டப்படும் என்றும் கூறப்படுகிறது.