'தாத்தா பிறந்த நாளுக்கு பேரன் போட்ட போட்டோ'... 'அதில் அனுஷா தயாநிதி கேட்ட கேள்வி'... வைரலாகும் கியூட் கமெண்ட்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்மறைந்த கலைஞர் கருணாநிதியின் பிறந்தநாளையொட்டி பலரும் அவருடனான பல்வேறு நினைவுகளைச் சமூகவலைத்தளங்களில் பகிர்ந்து வந்தனர்.

தமிழகத்தில் ஐந்து முறை முதல்வராக இருந்த மறைந்த கலைஞர் கருணாநிதியின் 97-வது பிறந்த நாள் நேற்று கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரையில் உள்ள கலைஞர் மு.கருணாநிதி நினைவிடத்தில், நேற்று காலை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
கொரோனா தொற்று காரணமாகக் கருணாநிதியின் பிறந்தநாளில் பெரிய அளவில் கொண்டாட்டங்களில் ஈடுபட வேண்டாம் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டார். இதையடுத்து பலரும் கலைஞர் கருணாநிதி உடனான தங்களின் நினைவுகளைச் சமூகவலைத்தளங்களில் பகிர்ந்து வந்தார்கள். தாங்கள் கலைஞர் கருணாநிதியுடன் எடுத்த பழைய புகைப்படங்களை ட்விட்டரில் பகிர்ந்து தங்கள் வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.
அந்த வகையில் கலைஞர் கருணாநிதியின் பேரனும், மு.க.அழகிரியின் மகனுமான தயாநிதி அழகிரி தான் சிறு வயதில் தனது தாத்தாவோடு எடுத்துக் கொண்ட புகைப்படத்தைப் பகிர்ந்து தனது பிறந்த நாள் வாழ்த்துகளை வெளியிட்டிருந்தார். அதற்கு தயாநிதி அழகிரியின் மனைவி அனுஷா அழகிரி கியூட்டான கமெண்ட் ஒன்றைப் பகிர்ந்திருந்தார்.
அதில், ''Who dat gundoo cutie'' எனப் பதிவிட்டிருந்தார். சமீபத்தில் தயாநிதி அனுஷா தம்பதிக்கு இரண்டாவது குழந்தை பிறந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
Who dat gundoo cutie 🥰 👀☺️☺️
— anusha dhayanidhi (@anushadhaya) June 3, 2021

மற்ற செய்திகள்
