தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் மருத்துவமனையில் அனுமதி.. ஹாஸ்பிடல் நிர்வாகம் வெளியிட்ட அறிவிப்பு..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் கொரோனா தொற்று சிகிச்சை காரணமாக சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தமிழக முதலமைச்சரான முக.ஸ்டாலின் தனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக நேற்று முன் தினம் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார். அவர் வெளியிட்ட பதிவில்,"இன்று உடற்சோர்வு சற்று இருந்தது. பரிசோதித்ததில் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டதையடுத்து தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன். அனைவரும் முகக்கவசம் அணிவதோடு, தடுப்பூசிகளைச் செலுத்திக் கொண்டு, பாதுகாப்பாய் இருப்போம்" என முதல்வர் குறிப்பிட்டிருந்தார்.
மருத்துவமனையில் அனுமதி
இந்நிலையில், இன்று சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனைக்கு சென்ற முக.ஸ்டாலின் அங்கு அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து காவேரி மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில்,"மாண்புமிகு தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்" என குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், கொரோனா தொடர்பான அறிகுறிகள் குறித்து முதல்வர் முக.ஸ்டாலினுக்கு பரிசோதனை நடைபெற்று வருவதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்திருக்கிறது.
சமீப வாரங்களாக சென்னையில் தினசரி கொரோனா பாதிப்புகள் அதிகரித்துவந்த நிலையில், பொது இடங்களில் மக்கள் அனைவரும் முகக் கவசம் அணிய வேண்டும் எனவும் தவறுபவர்களுக்கு 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் எனவும் சில தினங்களுக்கு முன்னர் சென்னை மாநகராட்சி அறிவித்திருந்தது.
இதனை தொடர்ந்து சென்னை மெட்ரோ நிர்வாகமும் பயணிகள் அனைவரும் நாளை முதல் கட்டாயம் முகக் கவசம் அணிந்திருக்க வேண்டும் என கடந்த வாரம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
Also Read | அப்பவே..அப்படியா..?.. ட்ரெண்டாகும் எலான் மஸ்க்கின் பழைய விசிட்டிங் கார்டு.. மஸ்க் போட்ட 'நச்' கமெண்ட்..!