பதவி விலக மறுக்கும் கோத்தபய.. பிரைவேட் ஜெட் வேண்டும் என கோரிக்கை... பரபரப்பில் இலங்கை..!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Madhavan P | Jul 14, 2022 10:47 AM

இலங்கையில் இருந்து மாலத்தீவுகளுக்கு தப்பிச் சென்ற கோத்தபய, அங்கிருந்து சிங்கப்பூருக்கு செல்ல இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதனால் இலங்கையில் போராட்டம் உச்சகட்டத்தை எட்டியுள்ளது.

Gotabaya seeks pvt jet to fly from Maldives to Singapore

Also Read | Heat பண்ணாலும் உருகாத ஐஸ்க்ரீம்.. குதூகலமான ஐஸ்க்ரீம் பிரியர்கள்.. "வெயில்'ல வெச்சு கூட இத குடிக்கலாம் போலயே.."

போராட்டம்

கடும் பொருளாதார நெருக்கடியில் தவித்துவந்த இலங்கையில் அரசுக்கு எதிராக மக்கள் போராட்டத்தில் குதித்தனர். இந்நிலையில், இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சேவின் மாளிகைக்குள் போராட்டக்காரர்கள் கடந்த வாரம் தடையை மீறி நுழைந்தனர். மேலும், மாளிகையில் இருக்கும் அறைகள் மற்றும் நீச்சல் குளங்களை போராட்டக்காரர்கள் பயன்படுத்தும் புகைப்படங்கள் சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வந்தன. அதிபர் மற்றும் பிரதமர் தங்களது பதவிகளை ராஜினாமா செய்யும் வரை போராட்டம் ஓயாது என போராட்டக்காரர்கள் தெரிவித்திருந்தனர்.

இதனை தொடர்ந்து அதிபர் கோத்தபய மற்றும் பிரதமர் ரணில் ஆகியோர் தங்களது பதவிகளை ராஜினாமா செய்ய இருப்பதாக அறிவித்தனர். நேற்று அதிகாரப்பூர்வமாக கோத்தபய பதவி விலக இருந்தார்.

தப்பிச்சென்ற அதிபர்

இந்நிலையில், நேற்று அதிபர் தனது குடும்பத்தினருடன் ராணுவ ஜெட்டில் மாலத்தீவிற்கு தப்பிச் சென்றதாக தகவல்கள் வெளியாகின. இதனைத் தொடர்ந்து பிரதமர் ரணில் விக்ரமசிங்கே இலங்கையின் பொறுப்பு அதிபராக செயல்படுவதாக பிரதமர் அலுவலகம் அறிவித்திருக்கிறது. மேலும், நாடு முழுவதும் அவசரநிலையை பிரகடனம் செய்வதாகவும், மேற்கு பிராந்தியங்களில் முழு ஊரடங்கை அமல்படுத்துவதாகவும் அறிவித்திருக்கிறார் ரணில்.

Gotabaya seeks pvt jet to fly from Maldives to Singapore

மேலும், நாட்டில் அமைதியை ஏற்படுத்த வேண்டியவற்றை செய்யவும் என ராணுவம் மற்றும் காவல்துறைக்கு புதிய உத்தரவை நேற்று மாலை வெளியிட்டிருந்தார் ரணில்.

பிரைவேட் ஜெட்

இதனிடையே, மாலத்தீவுகளில் இருக்கும் கோத்தபய பதவி விலக மறுப்பதாகவும் அங்கிருந்து சிங்கப்பூருக்கு தப்பிச்ச செல்ல இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும், தனக்கு பிரைவேட் ஜெட் வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிகிறது. இதுகுறித்து சபாநாயகர் அபேவர்தன பேசுகையில்,"மாலத்தீவில் இருந்து சிங்கப்பூர் செல்வதற்கு அதிபர் கோத்தபய ராஜபக்ஷ தனியார் ஜெட் விமானத்தை கோரியுள்ளார். அவர் இன்னும் பதவி விலகவில்லை" எனத் தெரிவித்திருக்கிறார். இதனையடுத்து, இலங்கையில் போராட்டம் உச்சகட்டத்தை எட்டியுள்ளது.

Also Read | ஒரே கிராமத்துல.. 30-க்கும் மேல இரட்டையர்கள்.. திகைத்து போன ஆய்வாளர்கள்.. "தமிழ்நாட்டில் இப்டி ஒரு அதிசய கிராமமா?"

Tags : #SRI LANKA #GOTABAYA #SRI LANKA CRISIS #MALDIVES #SINGAPORE #PRIVATE JET

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Gotabaya seeks pvt jet to fly from Maldives to Singapore | World News.