VIDEO: என் 'தங்கச்சியோட' அவருக்கு.. நேத்துதான் 'கல்யாணம்' ஆச்சு.. அதான் 'மேட்சுக்கு' வரல..ரொம்ப ஓபனா பேசுன.. சென்னை வீரர்!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Manjula | Dec 11, 2019 12:14 AM

தென்னாப்பிரிக்காவில் நடைபெறும் உள்ளூர் டி20 போட்டியில் பார்ல் ராக்ஸ் அணியும் - நெல்சன் மண்டேலா கெயின்ட்ஸ் அணியும் மோதின. பார்ல் ராக்ஸ் அணியின் கேப்டனாக டு பிளெசிஸ் உள்ளார்.

Viljoen not playing, he’s lying in bed with my sister: du Plessis

டாஸ் சுண்டப்பட்ட பின் டு பிளெசிஸ் அளித்த பேட்டியில், ''எங்கள் அணியில் ஒரு மாற்றம் உள்ளது. ஹார்டஸ் வில்ஜோன் இன்று விளையாட மாட்டார். ஏனெனில் நேற்றுதான் அவருக்கும், என்னுடைய தங்கைக்கும் (ரெமி ரைனர்) திருமணம் ஆனது.

எனவே இன்று அவர் என்னுடைய தங்கையுடன் படுக்கையில் ஒன்றாக இருப்பார்,'' என ரொம்பவே ஓபனாக பேசி இருக்கிறார். இதைக்கேட்டு வர்ணனையாளர் சிரிக்கும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. டு பிளெசிஸ் ஐபிஎல் போட்டிகளில் சென்னை அணிக்காக விளையாடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : #CSK #CRICKET