'சிஎஸ்கே' அனுப்பிய 'ஃகிப்ட்'.. மகிழ்ச்சியுடன் 'ட்வீட்' செய்த இங்கிலாந்து 'வீராங்கனை'.. வைரலாகும் 'புகைப்படம்'!. "இவங்க வெறித்தனமான 'CSK' ஃபேன் போல!!"
முகப்பு > செய்திகள் > விளையாட்டு14 ஆவது ஐபிஎல் சீசன், இந்தியாவில் வைத்து நடைபெற்று வந்த நிலையில், கொல்கத்தா அணியைச் சேர்ந்த வீரர்கள் 2 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது, சில தினங்களுக்கு முன் உறுதியானது.
இதனைத் தொடர்ந்து, சென்னை, ஹைதராபாத் மற்றும் டெல்லி அணியைச் சேர்ந்த வீரர்கள் மற்றும் அணியின் நிர்வாகத்தினர் ஆகியோரும், கொரோனா தொற்று மூலம் பாதிக்கப்பட்டது கண்டறியப்பட, உடனடியாக, ஐபிஎல் தொடரை நிறுத்துவதாக பிசிசிஐ அறிவித்திருந்தது. இதன் காரணமாக, ஐபிஎல் அணிகளில் இடம்பெற்றிருந்த வெளிநாட்டு வீரர்கள், தங்களது சொந்த ஊர் திரும்பி வருகின்றனர்.
இதனிடையே, தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணி குறித்து, கிரிக்கெட் வீராங்கனை ஒருவர் போட்ட ட்வீட் ஒன்று, தற்போது அதிகம் வைரலாகி வருகிறது. இங்கிலாந்து மகளிர் கிரிக்கெட் அணியைச் சேர்ந்த வீராங்கனை கேட் கிராஸ் (Kate Cross), ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணியின் மிகப்பெரிய ரசிகை ஆவார். சென்னை அணியின் போட்டிகள் நடைபெறும் போது, அது பற்றி அதிகம் ட்வீட் செய்யும் வழக்கத்தையும் கேட் கிராஸ் கொண்டுள்ளார்.
இந்நிலையில், கேட் கிராஸிற்கு தங்களது அணியின் ஜெர்சியை, சிஎஸ்கே அணி பரிசாக அளித்திருந்தது. இதனையடுத்து, சிஎஸ்கேவின் ஜெர்சியை அணிந்து கொண்டு, புகைப்படம் ஒன்றை, கேட் கிராஸ் ட்வீட் செய்துள்ளார்.
அதில், 'எனது முதல் சிஎஸ்கே ஜெர்சியை அனுப்பி வைத்த சிஎஸ்கே அணிக்கு மிகப்பெரிய நன்றி. மீண்டும் பாதுகாப்பான நிலை உருவாகி, ஐபிஎல் போட்டிகள் எப்போது மீண்டும் தொடங்குகிறதோ, அப்போது வீட்டில் இருந்த படியே சிஎஸ்கேவிற்காக விசில் அடிப்பேன்' என மிகுந்த மகிழ்ச்சியுடன் ட்வீட் ஒன்றைச் செய்துள்ளார்.
A HUGE thank you to @cskfansofficial and @chennaiipl for sending me my first CSK shirt. When it is safe to start the tournament again, I can #whistlefromhome 💛 #Yellove #WhistlePodu #nandri pic.twitter.com/aobCKSTNgd
— Kate Cross (@katecross16) May 4, 2021
இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் வீராங்கனை கேட் கிராஸ், சென்னை அணி குறித்து, ஆனந்தத்தில் பகிர்ந்த இந்த ட்வீட், ரசிகர்கள் மத்தியில், அதிகம் வரவேற்பைப் பெற்று வருகிறது.