VIDEO: 'அந்த போர்டு இருந்த இடத்துல இருக்கணும்...' 'அம்மா உணவகத்தை சூறையாடும் வைரல் வீடியோ...' - கொஞ்ச நேரத்துலையே 'அதிரடி' உத்தரவிட்ட ஸ்டாலின்...!
முகப்பு > செய்திகள் > தமிழகம்சென்னை முகப்பேரில் உள்ள அம்மா உணவகத்தில் இன்று (04--5-2021) காலை சென்ற திமுகவினர் சிலர் அங்கிருந்த பெயர்பலகை, முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் புகைப்படங்களை கிழித்து எறிந்தனர். அத்துடன் உணவகத்தில் இருந்த உணவுப் பொருட்களையும் உடைத்த வீடியோ இணையதளங்களில் வைரலாக பரவியது.
![stalin instructed take legal action against the two DMK men stalin instructed take legal action against the two DMK men](http://tamil.behindwoods.com/news-shots-tamil-news/images/tamilnadu/stalin-instructed-take-legal-action-against-the-two-dmk-men.jpg)
உடனே சம்பவ இடத்திற்கு சென்ற ஜெஜெ நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அம்மா உணவகம் சூறையாடும் வீடியோவில் ஒருவர் திமுக துண்டு அணிந்து இருந்த நிலையில் இணையத்தில் திமுக குறித்த விமர்சனங்கள் வைக்கப்பட்டது.
இந்த நிலையில் திமுக எம்எல்ஏ மா.சுப்ரமணியன் தனது ட்விட்டர் பக்கத்தில், “மதுரவாயல் பகுதியில் அரசு உணவகத்தின் பெயர் பலகையை எடுத்த இரண்டு கழக தோழர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கவும், பெயர் பலகையை மீண்டும் அதே இடத்தில் வைக்கவும்,அவ்விருவரை கழகத்திலிருந்து நீக்கவும் வணக்கத்திற்குரிய கழகத்தலைவர் அவர்கள் உடனடியாக உத்தரவிட்டார்…” என்று பதிவிட்டுள்ளார்.
குற்றம் செய்தது தெரியவந்த சில மணிநேரத்தில் புதியதாக ஆட்சியில் அமரவுள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உடனடியாக நடவடிக்கை எடுத்துள்ளதை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.
மதுரவாயல் பகுதியில் அரசு உணவகத்தின் பெயர் பலகையை எடுத்த இரண்டு கழக தோழர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கவும், பெயர் பலகையை மீண்டும் அதே இடத்தில் வைக்கவும்,அவ்விருவரை கழகத்திலிருந்து நீக்கவும் வணக்கத்திற்குரிய கழகத்தலைவர் அவர்கள் உடனடியாக உத்தரவிட்டார்... pic.twitter.com/8FjmbSzTgS
— Subramanian.Ma (@Subramanian_ma) May 4, 2021
![](https://www.behindwoods.com/images/spacer.gif)
மற்ற செய்திகள்
![](https://www.behindwoods.com/images/spacer.gif)