“தமிழ்ல அவர் எனக்கு கெட்ட வார்த்த மட்டும்தான் சொல்லிக் கொடுத்தாரு!”... அதிர வைத்த கபில்தேவ்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Siva Sankar | Jan 26, 2020 06:45 PM

1983-ஆம் ஆண்டு இந்திய கிரிக்கெட் அணி, உலகக்கோப்பையை வென்ற நிகழ்வை மையமாக வைத்து உருவாக்கியுள்ள 83 திரைப்படத்துக்கான அறிமுக நிகழ்ச்சி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. இந்த கலந்துரையாடலில் கிரிக்கெட் பிரபலங்கள் கபில்தேவ், ஸ்ரீகாந்த் மற்றும் நடிகர்கள் ரன்வீர் சிங், ஜீவா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

srikkanth taught me only bad words in tamil, kapil dev

முன்னதாக, நேரம் வந்தால் எல்லாருமே ஒருநாள் ஓய்வெடுத்துதான் ஆகவேண்டும் என்று, தோனி தொடர்பான கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்திருந்தார் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில்தேவ். இந்திய அணிக்காக தோனி சிறந்த முறையில் விளையாடியிருக்கிறார் என்றும், யார் விளையாடுகிறார்கள் என்பதைவிடவும், எப்படி அணியை வெற்றிபெறச் செய்கிறோம் என்பதுதான் முக்கியம் என்றும் தோனிக்கு யாரும் ஈடாக முடியாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் பேசிய கபில்தேவ்,  ‘நான் தென்னிந்தியாவில் பிறக்கவில்லை. இருப்பினும் சென்னை எனக்கு மிகவும் பிடிக்கும். தனக்கு மட்டுமல்லாமல் அனைத்து கிரிக்கெட் ஜாம்பவான்களுக்கும் சேப்பாகம் மைதானம் பிடிக்கும்’  என்று கூறினார். இடையில் பேசிய ஸ்ரீகாந்த், ‘ரசிகர்கள் தலைவா என்று குரல் கொடுத்தால் போதும், அந்த இடத்துக்கு சிக்ஸரை விளாசுவார் கபில்தேவ்’ என்று பேசினார்.

இதனிடையே, கபில்தேவை பார்த்து, ‘ஸ்ரீகாந்த் உங்களுக்கு தமிழில் என்ன  வார்த்தைகளை கற்றுக்கொடுத்தார்?’ என்று ரன்வீர் சிங் கேட்க, அதற்கு கபில்தேவோ,  ‘எனக்கு அவர் தமிழில் கெட்ட வார்த்தைகளை மட்டுமே கற்றுத் தந்தார்’ என்று கூறுகிறார்.

ஆனால் ஸ்ரீகாந்த் இதை மறுத்ததோடு, தான் அவ்வாறு கெட்ட வார்த்தைகளை கற்றுக்கொடுக்கவில்லை என்றும், ‘என்னடா மச்சான்.. எப்படி இருக்கடா மச்சான்’ உள்ளிட்டவற்றையே கற்றுக் கொடுத்ததாகவும் குறிப்பிடுகிறார்.

Tags : #KAPILDEV #SRIKKANTH #83MOVIE