நீயா? நானா?.. இந்தியாவிற்கு 3 கொரோனா தடுப்பு மருந்துகள்!.. கடும் போட்டியில் வெற்றிபெறப்போவது யார்!?
முகப்பு > செய்திகள் > இந்தியாஇந்தியாவில் தயாரிக்கப்படும் 3 கொரோனா தடுப்பு மருந்துகளில், ஒரு மருந்து 3ம் கட்ட மனித பரிசோதனைக்கு முன்னேறி இருக்கிறது.

ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் மற்றும் சீரம் நிறுவனம் இணைந்து தயாரிக்கும் Covishield தடுப்பு மருந்து, பாரத் பயோடெக்கின் Covaxin, மற்றும் Zydus Cadilaவின் ZycovD ஆகியன இந்தியாவில் உருவாக்கப்படும் கொரோனா தடுப்பு மருந்துகள்.
இந்நிலையில், சீரம் நிறுவனம் கடந்த திங்களன்று, அதன் கொரோனா தடுப்பு மருந்தின் 2ம் கட்ட மனித பரிசோதனையைத் தொடங்கியுள்ளதாக அறிவித்தது. Zydus Cadilaவும் சில தினங்களுக்கு முன்பு தான், அதன் வாக்சினின் 2ம் டோஸ்-ஐ அறிமுகப்படுத்தியது.
இதுகுறித்து, மத்திய சுகாதாரத்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், இந்தியாவின்3 கொரோனா தடுப்பு மருந்துகளில் ஒரு மருந்து, 3ம் கட்ட மனித பரிசோதனைக்கு விரைவில் உட்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தடுப்பு மருந்தின் பெயரை குறிப்பிடாமல் அறிக்கை வெளியிடப்பட்டிருக்கும் நிலையில், அது பாரத் பயோடெக்கின் கோவேக்ஸின் தான் என அதிகார வட்டங்கள் கூறுகின்றன.

மற்ற செய்திகள்
