இன்ஸ்டா தோழிக்கு சர்ப்ரைஸ் கிஃப்ட்.. இளைஞர் போட்ட பிளான்.. கையோட கூட்டிட்டு போன போலீஸ்..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்வேலூர் அருகே இன்ஸ்டாகிராமில் அறிமுகமான தோழிக்கு பரிசளிக்க நகைகளை திருடியதாக வாலிபர் ஒருவர் போலீசார் கைது செய்யப்பட்டு இருக்கிறார். இந்த சம்பவம் அந்தப் பகுதி முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
Images are subject to © copyright to their respective owners.
Also Read | அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் விவேக் ராமசாமி.. பெரும் எதிர்பார்ப்பில் இந்தியர்கள்.. முழு விபரம்..!
வேலூர் மாவட்டம் சித்தேரி பகுதியைச் சேர்ந்தவர் நரேஷ் குமார். தம்புல பைகள் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வரும் நரேஷ் குமார் கடந்த 18 ஆம் தேதி குடும்பத்தினருடன் வேலூர் கோட்டை ஜலகண்டேஸ்வரர் கோவிலுக்கு சென்று இருக்கிறார். இன்றைய தினம் மகா சிவராத்திரி என்பதால் அந்தப் பகுதியில் உள்ள பலரும் அருகில் உள்ள கோவிலுக்கு சென்று இருந்திருக்கின்றனர்.
இதனை அடுத்து அடுத்த நாள் வீட்டுக்கு திரும்பிய நரேஷ் குமார் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்திருக்கிறார். உள்ளே சென்று பார்க்கையில் பீரோவில் வைத்திருந்த 11 சவரன் தங்க நகை 750 கிராம் வெள்ளி பொருட்கள் காணாமல் போனது தெரிய வந்திருக்கிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த நரேஷ் குமார் இது குறித்து அரியூர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார். நரேஷ் குமாரின் வழக்கை பதிவு செய்த காவல் துறையினர் இது குறித்த விசாரணையில் இறங்கினர்.
Images are subject to © copyright to their respective owners.
அப்போது திருட்டு நடைபெற்ற பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை போலீசார் ஆய்வு செய்தனர். திருட்டு நடைபெற்றதாக சொல்லப்பட்ட இரவில் மர்ம நபர் ஒருவர் அப்பகுதியில் சுற்றி திரிந்தது காவல் துறையினருக்கு தெரிய வந்திருக்கிறது. இதையடுத்து நடத்தப்பட்ட விசாரணையில் அவர் அதே பகுதியைச் சேர்ந்த அர்ஜுன் ராஜ்குமார் என்பதும் அவர் நரேஷ் வீட்டில் திருடியதும் தெரிய வந்திருக்கிறது. இதனை அடுத்து அவரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி அவரிடம் இருந்த 11 சவரன் தங்க நகை மற்றும் 750 கிராம் வெள்ளி பொருட்களை பறிமுதல் செய்தனர்.
Images are subject to © copyright to their respective owners.
கைது செய்யப்பட்ட அர்ஜுன் ராஜ்குமார் மீது ஏற்கனவே திருட்டு வழக்கு இருப்பதாகவும் அவர் தற்போது காவல் நிலையத்தில் கையெழுத்திட்டு வருவதாகவும் அரியூர் காவல்துறையினர் தெரிவித்திருக்கின்றனர். அண்மையில் இன்ஸ்டாகிராம் மூலமாக இளம்பெண் ஒருவருடன் அர்ஜுன் ராஜ்குமார் பேசி வந்ததாகவும் அவருக்கு பரிசு அளிக்க பணம் இல்லாததால் திருட்டில் ஈடுபட்டதாக அவர் போலீஸாரிடத்தில் தெரிவித்ததாகவும் தெரிகிறது.
இன்ஸ்டாவில் அறிமுகமான இளம் பெண்ணிற்கு பரிசளிக்க திருட்டில் ஈடுபட்ட வாலிபர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டிருப்பது சித்தேரி பகுதி முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
Also Read | மாத சம்பளம் ரூ.4 லட்சம்.. ஏகப்பட்ட சலுகைகள்.. ஆனாலும் வேலைக்கு ஆள் கிடைக்கல.. அப்படி என்னப்பா வேலை அது?