மாத சம்பளம் ரூ.4 லட்சம்.. ஏகப்பட்ட சலுகைகள்.. ஆனாலும் வேலைக்கு ஆள் கிடைக்கல.. அப்படி என்னப்பா வேலை அது?
முகப்பு > செய்திகள் > உலகம்ஸ்காட்லாந்து நாட்டில் மாதம் 4 லட்ச ரூபாய் ஊதியம் கொடுக்க ஒரு நிறுவனம் முன்வந்தாலும் வெகு சிலரே இந்த பணிக்கு விண்ணப்பித்திருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இது உலகம் முழுவதும் பலரையும் ஆச்சரியப்படுத்தி உள்ளது.
Images are subject to © copyright to their respective owners.
Also Read | திருமண தேதி என்ன?.. திருதிருன்னு முழிச்ச கணவன்.. கோபத்துல மனைவி செஞ்ச பகீர் காரியம்..!
சமீப காலங்களில் பன்னாட்டு நிறுவனங்கள் பல தங்களது ஊழியர்களை பணி நீக்கம் செய்து வருவது குறித்து நாம் கேள்விப்பட்டு வருகிறோம். உலக அளவிலான பொருளாதார மந்த நிலை காரணமாக நிறுவனங்கள் இந்த முடிவை எடுத்து வருவதாக அப்போது தகவல்களும் வெளியாகி வருகின்றன. இது ஒருபக்கம் இருந்தாலும் வேலைகளை தக்கவைத்துக் கொள்ளவும் நல்ல ஊதியம் தரும் வேலையை தேடவும் மக்களிடத்தில் எப்போதுமே பெரும் ஆர்வம் இருந்து வருகிறது.
இந்த சூழ்நிலையில் ஸ்காட்லாந்து நாட்டில் மாதம் 6 லட்சம் ரூபாய் ஊதியம் தர நிறுவனம் ஒன்று முன் வந்தாலும் வேலைக்கு வெகு சிலரே இந்த வேலைக்கு விண்ணப்பித்திருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
Images are subject to © copyright to their respective owners.
ஐரோப்பிய நாடான ஸ்காட்லாந்தில் உள்ள அபெர்டீன் கடலில் இயங்கி வரும் ரிக் ஒன்றில் (Offshore Rigg) 5 காலி பணியிடங்கள் இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வருடத்தில் ஆறு மாதத்திற்கு வேலையும் மீதி ஆறு மாதத்திற்கு விடுமுறையும் வழங்கப்படும் என அந்த நிறுவனம் அறிவித்திருக்கிறது.
விடுமுறையின் போது ஒரு நாளுக்கு 3,877 ரூபாய் ஊதியமாக வழங்கப்படும் எனவும் பனிக்காலத்தில் ஒரு வார கால மருத்துவ விடுப்பு எடுத்துக் கொள்ளலாம் எனவும் அந்த கம்பெனி தெரிவித்திருக்கிறது. இந்தப் பணிக்கு தேர்வானவர்களுக்கு மாதம் 4 லட்ச ரூபாய் வரையில் ஊதியம் கொடுக்கப்படும் எனவும் இரண்டு வருட அனுபவம் பெற்று விட்டால் ஊதியம் 95,420 பவுண்டுகளாக (இந்திய மதிப்பில் சுமார் ஒரு கோடி ரூபாய்) ஊதியம் உயர்த்தப்படும் எனவும் அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Images are subject to © copyright to their respective owners.
இந்த பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் BOSIET, FOET, CA-EBS மற்றும் OGUK மெடிக்கல் டிரெய்னிங் ஆகிய தகுதிகளை பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆற்றல் துறையில் பெரு நிறுவனம் என அந்த நிறுவனம் தன்னை குறிப்பிட்டு இருந்தாலும் நிறுவனத்தின் பெயர் எங்குமே குறிப்பிடப்படவில்லை. இது குறித்த அறிவிப்பு வெளியாகி 24 நாட்களை கடந்து இருக்கிறது. ஆனாலும் இந்த பணியிடங்களுக்கு வெகு சிலரே விண்ணப்பித்திருப்பதாக தெரிகிறது. நிறுவனம் கேட்டிருக்கும் தகுதிகளை கொண்ட நபர்களை இன்னும் கண்டறியாததே இதற்கு காரணமாக இருக்கலாம் எனவும் நெட்டிசன்கள் இது குறித்து விவாதித்து வருகின்றனர்.
Also Read | அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் விவேக் ராமசாமி.. பெரும் எதிர்பார்ப்பில் இந்தியர்கள்.. முழு விபரம்..!