'அந்த ஊக்கமருந்தின் பேர் கூட தெரியாது.. நான் ஜெயிச்சுக் காட்டுவேன்'.. கோமதி மாரிமுத்துவின் உருக்கமான பேச்சு!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Siva Sankar | May 28, 2019 01:59 PM

தான் எடுத்துக்கொண்டதாகச் சொல்லப்பட்ட ஊக்கமருந்தின் பெயர் கூட தனக்குத் தெரியாத அளவிலான தமிழ்வழிக் கல்வியறிவுதான் தன்னுடையது என ஆசிய தங்கமங்கையும் தமிழ்ப்பெண்ணுமான கோமதி மாரிமுத்து வீடியோவழி விளக்கமொன்றை அறிவித்துள்ளார்.

\'dont even know the drugs name\' AthleticGold Gomathi Marimuthu

தோஹாவில் கடந்த மாதம் நடந்த ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில், 800 மீட்டர் ஓட்டத்தி பங்கேற்ற தமிழ் நாட்டைச் சேர்ந்த தடகள வீராங்கனை கோமதி மாரிமுத்து, 2  நிமிடம் மற்றும் 70 விநாடிகளில் இலக்கை அடைந்து தங்கம் வென்றார். ஆனால் அந்த சமயம் கோமதி மாரிமுத்து ஊக்கமருந்து பயன்படுத்தியதாகவும், அதனால் அவர் விளையாடுவதற்கு தடை விதிக்கப்பட்டதாகவும் பிரபல செய்தி நிறுவனம் வெளியிட்ட தவறுதலான செய்தியால் சர்ச்சைகள் உண்டானது.

ஆனால் கோமதி மாரிமுத்துவுக்கு ஏ சாம்பிள் சிறுநீர் பரிசோதனை செய்த ஆசிய தடகள சம்மேளம் அளித்த அந்த பரிசோதனை முடிவு கோமதிக்கு பாதகமாகவே அமைந்தது. அதாவது தடைசெய்யப்பட்ட நாண்ட்ரோலன் வகை ஸ்டீராய்டு ஊக்கமருந்தை கோமதி மாரிமுத்து உட்கொண்டதாக ஆசிய தடகள சம்மேளம் கூறியதாக தகவல்கள் வெளியாகி பரவிவந்தன. இதனை அடுத்து அடுத்து, பி சாம்பிள் பரிசோதனைக்காக கத்தார் சென்றுள்ள கோமதி, அங்கிருந்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். 

அதில், ‘நான் உட்கொண்டதாக சிலர் கூறும் அந்த தடைசெய்யப்பட்ட மருந்தின் பெயர் கூட தெரியாத ஆங்கில மொழியறிவுதான் என்னுடைய தமிழ்வழிக்கல்வியறிவு. என்னால் இவ்வாறான குற்றச்சாட்டுகளை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. நான் தற்போது பி சாம்பிள் பரிசோதனை முடிவுக்காக காத்திருக்கிறேன். இந்த முடிவில் நான் என்னை நிரூபிப்பேன் என்று நம்பிக்கை கொண்டிருக்கிறேன். நான் எந்த ஊக்கமருந்தையும் எடுக்கவில்லை என்பதை நிரூபிக்கும் வரை நான் இதை விடமாட்டேன். ஜெயித்துக் காட்டுவேன்’ என்று கூறியுள்ளார்.

Tags : #ASIANCHAMPIONSHIP2019 #GOMATHIMARIMUTHU #DOPE TEST