நான் தேவையின்றி அரசியலுக்கு வந்ததுக்கு 'காரணம்' அவர்தான்... ஜெ.தீபா பரபரப்பு குற்றச்சாட்டு!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தான் தேவையில்லாமல் அரசியலுக்கு வந்ததுக்கு காரணம் என்ன? என்பது குறித்து ஜெ.தீபா தெரிவித்துள்ளார்.

மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்களின் வேதா இல்லத்தில் உள்ள அசையும், அசையா சொத்துக்கள் அனைத்தையும் தமிழக அரசு கையகப்படுத்தியது. இதை எதிர்த்து ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த மனு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. ஜெ.தீபா தரப்பின் கோரிக்கையை ஏற்க மறுத்த நீதிபதி, ஜெயலலிதா உயிருடன் இருந்த போது எங்கிருந்தீர்கள் ? எனக் கேள்வி எழுப்பினார். அத்துடன் தீபா தொடர்ந்த இந்த வழக்கை இரு நீதிபதிகள் அமர்வுக்கு மாற்ற பரிந்துரைத்து உத்தரவிட்டார்.
இந்த நிலையில் தான் அரசியலுக்கு வந்ததன் காரணம் குறித்து ஜெ.தீபா பத்திரிகையாளர் சந்திப்பில் தெரிவித்து இருக்கிறார். இதுகுறித்து அவர் கூறியதாவது:-
ஜெயலலிதா சொத்துக்களை அடைய வேண்டும் என்ற எண்ணம் எனக்கு இல்லை. நான் நடத்துவது சொத்துக்கான போராட்டம் இல்லை. நான் நடத்துவது உரிமைக்கான போராட்டம். உங்களுக்கு என்ன வேண்டும் என எனது அத்தை ஜெயலலிதா பல முறை என்னிடம் கேட்டுள்ளார் ஆனால் நாங்கள் அதை நிராகரித்து வந்துள்ளோம். ஜெயலலிதா விரும்பாததால் என்னால் போயஸ் இல்லத்திற்கு செல்ல முடியவில்லை என்பது இல்லை.
சசிகலாவால் தான் போயஸ் இல்லத்திற்கு என்னால் செல்ல முடியவில்லை. ஜெயலலிதா இருந்தபோது எனக்கும், போயஸ் இல்லத்திற்கும் சம்பந்தம் இல்லாதது போல் சித்தரித்தனர். ஓ.பன்னீர்செல்வம் நடத்திய தர்ம யுத்தத்தால் தான் எல்லோருக்கும் தலைவலி ஏற்பட்டது. எல்லா பிரச்சினைக்கும் காரணம் ஓ.பன்னீர் செல்வம் தான். நான் இப்போது தெய்வத்தையும், ஜெயலலிதாவின் ஆன்மாவைதான் நம்பி உள்ளேன்.
ஆறுமுகசாமி ஆணையம் 6 முறை அழைத்தும் ஓபிஎஸ் விசாரணைக்கு ஆஜராகாதது ஏன்? நான் தேவையின்றி அரசியலுக்கு வந்ததற்கு ஓபிஸ் தான் காரணம். ஜெயலலிதா எப்படி இறந்தார் என்பது பற்றி அதிமுக தலைவர்களுக்கு கவலையே இல்லை.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மற்ற செய்திகள்
