'இராஜராஜ சோழன் என் ஃப்ரண்ட் தான்...' 'நான் இறந்து 1000 வருஷம் ஆச்சு...' இப்போ இந்த மண்ணுக்கடியில இருக்குற எனக்கு சொந்தமான 'அந்த' ஒண்ண பார்க்கணும்...! - ஆச்சரியப்படுத்திய நபர்...!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Behindwoods News Bureau | Jan 02, 2021 08:19 PM

திருநெல்வேலி மாவட்டம், ரெட்டியார் பட்டி என்ற ஊரில் பலசரக்கு கடை வியாபாரம் செய்து வருபவர் பரதேசி பிள்ளை மகன் சுந்தரி கண்ணன். இவர் கடந்த ஏழு வருடங்களுக்கு முன்பு ஆட்டோ டிரைவராக இருந்துள்ளார்.

nellai man temple he built 1000 years ago claimed king of Pa

வல்லநாடு அருகே உள்ள அனந்த நம்பி குறிச்சிக்கு  சவாரி வந்த போது இவருக்கு பூர்வ ஜென்ம நினைவு வந்தது. திடீரென அவர் ஆட்டோ ஓட்டுவதை மறந்து குதிரை வண்டி ஓட்டுவதாக உணர்ந்தார். மேலும் தார் ரோடு மணல் ரோடாக மாறியது போலவும் அவருக்கு தோன்றியுள்ளது. இவருடைய மனநிலை 1000 வருடத்துக்கு முந்தைய காலகட்டத்துக்கு சென்றது.  அந்தசமயத்தில்  அவர்  ஸ்ரீவைகுண்டத்தினை ஆண்ட பாண்டிய அரசனாக மாறினார். முன் ஜென்ம நினைவு வந்த காரணத்தினால் ஆட்டோவை  ஒரு ஓரமாக நிறுத்தி விட்டார்.             

பின் கொங்கராயகுறிச்சி என்ற பகுதிக்கு வந்தார். அங்கு வந்தவுடன் அது, தான் ஆண்ட நாடு என்றும் அங்கே அவர் கட்டிய கோயில் ஆற்று மணலுக்குள் புதைந்து கிடக்கிறது என்றும் அதை கண்டு பிடிக்க வேண்டும் என்றும் அவருக்கு தோன்றியது.

அந்த இடத்தில குழி தோண்ட துவங்கினார். அப்போது அவர்  குழி தோண்டுவதை தடுத்து நிறுத்தி விட்டு ஸ்ரீவைகுண்டம் தாசில்தார்  கோபாலகிருஷ்ணனுக்கு தகவல் கொடுத்தார். உடனே அங்கே விரைந்து வந்த தாசில்தார் தோண்டிய குழியை மூடச்சொல்லி விட்டு எச்சரித்து அனுப்பினார். முறைப்படி மத்திய அரசு அனுமதி கொடுத்தால் மட்டுமே குழி தோண்ட முடியும். எனவே மீறி தோண்டினால் உங்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர். உடனே சட்டத்திற்கு கட்டுப்பட்டு குழியை மூடினார்.

இதுகுறித்து அவர் கூறியபோது, நான்  1000 வருடங்களுக்கு முன்பு ஸ்ரீவைகுண்டத்தினை தலைமையிடமாக கொண்டு ஆட்சி செய்த மன்னன். என் பெயர் எனக்கு மறந்துவிட்டது. ஆனால் என் மனைவி பெயர் சுந்தரி. எனக்கு அண்ணன் ஒருவரும் உண்டு.  என்னுடைய காலத்தில் தான் தஞ்சை பெரிய கோயில் கட்டப்பட்டது. அந்த கோயிலை கட்டிய ராஜராஜ சோழன் என் நண்பர்.   

இதற்கிடையில் நான் தஞ்சாவூர் கோயில் கும்பாபிசகேத்துக்கு செல்ல என் மனைவியுடன்  கிளம்பும் போது, என்னை ஒரு தலையாக காதலித்த எனது  பணிப்பெண் எங்கள் இருவரையும் விஷம் வைத்து கொன்று விட்டாள். நான் உயிரோடு இருந்திருந்தால் இந்த கோயிலையும் கும்பாபிசேகம் செய்திருப்பேன். அதன் பிறகு தம்பி இறந்த துக்கம் தாங்காமல் என் அண்ணன் இறந்து விடவே . கோயில் அப்படியே மண்ணுக்குள் புதைந்து விட்டது

இவர் கூறுவது வேடிக்கையாக முன்ஜென்மம் என  இருந்தாலும் கூட ஆதிச்சநல்லூர் எதிர்கரையில் உள்ள கொங்கராயகுறிச்சி ஒரு புதை நகரம் என  ஆய்வாளர்களிடம் கருத்து இதில் ஒத்துப்போகிறது. உண்மையில் அவர் கூறுவது போல் அந்த இடத்தில் கோயில் உள்ளதா என்பதை மத்திய அரசின் தொல்பொருள் ஆய்வாளர்கள் ஆய்வு மேற்கொண்டால் தான் தெரிய வரும். இந்த சம்பவம் மக்களிடையை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Nellai man temple he built 1000 years ago claimed king of Pa | Tamil Nadu News.