'மனசே பொறுக்கல...' ஆஞ்சநேயர் கோயிலுக்கு போக வழி இல்லையே...! 'ஒரு கோடி மதிப்புள்ள சொத்தை...' - மதம் கடந்து இஸ்லாமியர் செய்த காரியம்...!
முகப்பு > செய்திகள் > இந்தியாபெங்களூரை சேர்ந்த இஸ்லாமிய முதியவர் ரூ.1 கோடி மதிப்பிலான நிலத்தை வீர ஆஞ்சனேய சாமி கோவில் அறக்கட்டளைக்கு தானமாக எழுதி கொடுத்த நிகழ்வை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.
![Bangalore Muslim man donated land worth Rs 1 crore temple Bangalore Muslim man donated land worth Rs 1 crore temple](http://tamil.behindwoods.com/news-shots-tamil-news/images/india/bangalore-muslim-man-donated-land-worth-rs-1-crore-temple.jpg)
பெங்களூரு மாவட்டம் காடுகோடி பெலதூர் காலனியில் வசித்து வருபவர் 65 வயதான எச்.எம்.ஜி.பாஷா. லாரி தொழிலதிபரான பாஷா அவர்களுக்கு பெங்களூருவில் இருந்து 35 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள ஒசகோட்டே வலகேரபுராவில் பழைய மெட்ராஸ் ரோட்டில் 3 ஏக்கர் நிலம் உள்ளது. இந்த நிலத்திற்கு பக்கத்தில் ஒரு வீர ஆஞ்சநேயர் கோவிலும் காணப்படும். ஆனால் கோவிலுக்கு செல்ல பாதை இல்லாததால் பக்தர்கள் சிரமப்பட்டு சென்று வந்தனர்.
இந்நிலையில் கோவில் நிர்வாகத்தார் கோவிலை புராணமைக்கவும், பக்கத்தில் இருக்கும் காலி மைதானத்தை விரிவுப்படுத்த பாஷா அவர்களிடம், சில பக்தர்கள் நிலம் வழங்கும்படி கோரிக்கை விடுத்தனர். இதனைத் தொடர்ந்து கோரிக்கையை ஏற்றுக்கொண்ட பாஷா, ஆஞ்சநேயர் கோவில் அருகில் உள்ள 1.5 சென்ட் நிலத்தை கோவிலுக்கு தானமாக வழங்க முடிவு செய்தார். மேலும் அந்நிலத்தின் மதிப்பு ரூ.1 கோடி எனவும், அதனை வீர ஆஞ்சனேய சாமி கோவில் அறக்கட்டளைக்கு தானமாக எழுதி கொடுத்துள்ளார்.
இதுகுறித்து கூறிய பாஷா, 'அடிப்படையில் நாம் அனைவரும் மனிதர்கள், இந்து, முஸ்லிம் என்ற பாகுபாடு பார்க்காமல் நாம் நம் வாழ்வை ஒன்றாக சேர்ந்து வாழவேண்டும்.
சில அரசியல் தலைவர்கள் சொந்த நலனுக்காக மக்களிடையே சாதி, இனம், மொழி அடிப்படையில் பிரித்து வைத்துள்ளனர். தற்போதைய தலைமுறை வகுப்புவாத நடவடிக்கைகளை சிந்தித்து வருகிறது. இது மாற வேண்டும்.
நாம் அனைவரும் ஒற்றுமையாக இருக்கவே எனது நிலத்தை ஆஞ்சநேயர் கோவிலுக்கு தானமாக வழங்கியுள்ளேன். புதுப்பிக்கப்பட்ட கோவிலை காண ஆர்வமாக உள்ளேன்' என மனம் மகிழ கூறியுள்ளார்.
இந்த சம்பவம் தற்போது வைரலாகி அனைவரது பாராட்டுகளையும் வாழ்த்துக்களையும் பெற்று வருகிறார் பாஷா.
![](https://www.behindwoods.com/images/spacer.gif)
மற்ற செய்திகள்
![](https://www.behindwoods.com/images/spacer.gif)