பைக்ல என்ன வச்சுருக்கீங்க...? 'செக் பண்ணி பார்த்தப்போ, உள்ள...' - கடத்தலுக்கு பின்னால் இருந்த அதிரடி திட்டம்...!
முகப்பு > செய்திகள் > தமிழகம்சென்னை செங்குன்றம் பகுதியில் ரூபாய் 13 லட்சம் பாதிப்புள்ள 4 கிலோ கொக்கைன் போதைப்பொருளை விற்க முயன்ற மர்ம நபர்களை ஒருங்கிணைந்த குற்றப்புலனாய்வு பிரிவினர் கைது செய்துள்ளனர்.

ஒருங்கிணைந்த குற்றப்புலனாய்வு பிரிவுக்கு சென்னையை அடுத்த செங்குன்றம் பகுதியில் கொக்கைன் போதைப்பொருளை சிலர் கடத்திச் செல்வதாக கிடைத்த தகவலின் பெயரில் போலீசார் செங்குன்றம் காவாங்கரை பகுதியில் கண்காணித்தனர். அப்போது சந்தேகப்படும் வகையில் பைக்கில் சென்ற 2 பேரை மடக்கி சோதனை செய்ததில் அவர்களிடமிருந்து 4 கிலோ மெத்த பெட்டமைன் போதைப்பொருள் மறைத்து வைத்து கடத்திச் சென்றது தெரியவந்தது.
அவர்களை கைது செய்து விசாரணை நடத்தியதில் அவர்களின் இருவரும் செங்குன்றத்தைச் சேர்ந்த சதீஷ் மற்றும் கணேஷ் என்பதும், 2 பேரும் மெத்த பெட்டமைன் போதைப்பொருளை இலங்கைக்கு கடத்த முயன்றதும் தெரியவந்துள்ளது.
பறிமுதல் செய்தபட்ட போதைப்பொருளின் இந்திய ரூபாயில 13 லட்சம் இருக்கும் என குற்றப்புலனாய்வு போலீசார் தெரிவித்தனர். பின்பு அவர்கள இருவரையும் மாநில போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
இருவரையும் கைது செய்த மாநில போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு போலீசார், அவர்களிடம் போதைப்பொருளை யாரால், யருக்கு கொடுக்கப்பட்டது எனவும் ஏன் இலங்கைக்கு கடத்த முயன்றனர் எனவும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மற்ற செய்திகள்
