VIDEO: என்ன வேணா நடக்கட்டும் நான் ‘சந்தோஷமா’ இருப்பேன்.. ‘குத்தாட்டம்’ போட்ட கோலி.. ‘செம’ வைரல்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Selvakumar | Oct 15, 2020 09:29 PM

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு கேப்டன் விராட் கோலி மைதானத்தில் ஜாலியாக நடனம் ஆடிய வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

RCB captain Virat Kohli dance in ground video goes viral

ஐபிஎல் தொடரின் 31-வது லீக் போட்டி இன்று (15.10.2020) ஷார்ஜா மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், கே.எல்.ராகுல் தலைமயிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற பெங்களூரு அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.

இந்த நிலையில் பஞ்சாப் அணியின் ப்ளேயின் லெவனில் 3 மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அதில் கிறிஸ் கெய்ல், தீபக் ஹூடா, முருகன் அஸ்வின் ஆகியோர் இடம்பிடித்துள்ளனர். இதுவரை விளையாடியுள்ள 7 போட்டிகளில் ஒன்றில் மட்டுமே வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் பஞ்சாப் அணி இருந்து வருகிறது.

இந்த நிலையில் இப்போட்டி ஆரம்பிக்கும் முன்னர் பெங்களூரு கேப்டன் விராட் கோலி மைதானத்தில் செம ஜாலியாக நடனம் ஆடினார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. ஐபிஎல் தொடரில் விராட் கோலி ஆடும் 200-வது போட்டி இது என்பதும் குறிப்பிடத்தக்கது.

RCB captain Virat Kohli dance in ground video goes viral

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. RCB captain Virat Kohli dance in ground video goes viral | Sports News.