VIDEO : "இனிமே என்னால் முடியாதுபா.." போட்டிக்கு நடுவே, 'ஜடேஜா'விடம் 'தோனி' சொன்ன 'விஷயம்'.. மைக்கில் பதிவான 'ஆடியோ'.. வைரல் 'சம்பவம்'!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுதோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, கடந்த ஐபிஎல் சீசனில் பிளே ஆஃப் சுற்றுக்குக் கூட முன்னேறாமல், புள்ளிப் பட்டியலில் 7 ஆவது இடம் பெற்று வெளியேறியிருந்தது.
இதனால், தோனியின் கேப்டன்சி மற்றும் சென்னை அணியின் சீனியர் வீரர்களின் ஆட்டம், கடுமையான விமர்சனங்களை சந்தித்திருந்தது. இதனைத் தொடர்ந்து, இந்த சீசனில், சென்னை அணி இதுவரை 5 போட்டிகளில் விளையாடியுள்ள நிலையில், நான்கு போட்டிகளில் வெற்றி பெற்று, புள்ளிப் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.
மேலும், இந்த சீசனில் தொடர் வெற்றிகளுடன் வலம் வந்த பெங்களூர் அணிக்கு, சென்னை அணி நேற்று முட்டுக்கட்டை போட்டது. இந்த போட்டியில், பேட்டிங், பவுலிங் என இரண்டிலும் அசத்திய ஜடேஜா, பெங்களூர் அணியை தனியாளாக நொறுக்கித் தள்ளினார். சென்னை அணி நிர்ணயித்த 192 ரன்கள் என்ற இலக்கை நோக்கி ஆடிய பெங்களூர் அணி, நல்ல தொடக்கத்தைக் கொடுத்தாலும், சில ஓவர்களுக்கு பிறகு, அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
இறுதியில், 122 ரன்கள் மட்டுமே பெங்களூர் அணியால் எடுக்க முடிந்ததால், சென்னை அணி 69 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதனிடையே, இந்த போட்டியில், ஜடேஜாவிடம் தோனி சொன்ன காமெடியான விஷயம் ஒன்று, தற்போது அதிகம் வைரலாகி வருகிறது.
பெங்களூர் அணி வீரர் டிவில்லியர்ஸை 11 ஆவது ஓவரில், ஜடேஜா அவுட்டாக்கினார். அப்போது காலத்தில் ஜேமிசன் மட்டும் இருந்தார். இதனைத் தொடர்ந்து, ஹர்ஷல் படேல், பேட்டிங் செய்ய வந்தார். அப்போது, தோனி ஜடேஜாவிடம், 'இனிமேல் என்னால் ஹிந்தியில் பேச முடியாது' என கூறினார். இதனைக் கேட்டதும், ரெய்னா மற்றும் ஜடேஜா ஆகியோர் சிரிக்க ஆரம்பித்து விட்டனர். இது தொடர்பான ஆடியோ, ஸ்டம்ப் மைக்கில் பதிவாகியிருந்தது.
— pant shirt fc (@pant_fc) April 26, 2021
பொதுவாக, எதிரணி வீரர்கள் பேட்டிங் செய்யும் போது, கீப்பிங் நிற்கும் தோனி, தனது பந்து வீச்சாளர்களுக்கு ஹிந்தியில் ஆலோசனை வழங்கிக் கொண்டே இருப்பார். டிவில்லியர்ஸ் அவுட் ஆவதற்கு முன்னர் வரை, இரண்டு வீரர்களும் வெளிநாட்டு வீரர்கள் என்பதால், ஹிந்தியில் தோனி பேசினால் அவர்களுக்கு புரியாது. ஆனால், ஹர்ஷல் படேல் வந்ததால், தோனி கொடுக்கும் ஆலோசனை அவர்களுக்கு எளிதாக புரிந்து விடும்.
இதனால் தான், தோனி அப்படி நக்கலாக கூறினார். கீப்பிங்கில் அசத்தலான ஆலோசனைகளை வழங்கி, பந்து வீச்சளர்களுக்கு சிறப்பான ஆலோசனையை வழங்கி அசத்தும் தோனி, இது போன்ற செயல்களையும் குறும்பாக செய்யத் தவறுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.