பிரபல கிரிக்கெட் வீரர் வீட்டிற்கு விசிட் அடித்த சதீஷ்.. "உணர்ச்சி பொங்க நன்றி சொன்ன வீரர்.. வைரலாகும் புகைப்படம்

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Ajith Kumar V | Mar 18, 2022 08:33 PM

தமிழில் முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவர் சதீஷ். மதராசபட்டினம், எதிர்நீச்சல், கத்தி, ரெமோ உள்ளிட்ட பல திரைப்படங்களில் இவரது கதாபாத்திரம் அதிக வரவேற்பினை பெற்றிருந்தது.

Actor Sathish visits T Natarajan house photo gone viral

மேலும், சமீபத்தில் இவர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருந்த நாய் சேகர் திரைப்படமும், மக்கள் மத்தியில் அதிக வரவேற்பினை பெற்றிருந்தது.

தொடர்ந்து, 'கணம்' உள்ளிட்ட சில திரைப்படங்களிலும், சதீஷ் நடித்து வருகிறார்.

கிரிக்கெட் வீரர் வீட்டிற்கு விசிட்

இந்நிலையில், பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் ஒருவரின் வீட்டிற்கு சதீஷ் சென்று, விசிட் அடித்துள்ள சம்பவம், ரசிகர்கள் மத்தியில் அதிகம் வைரலாகி வருகிறது. சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த கிரிக்கெட் வீரரான நடராஜன், ஐபிஎல் தொடரில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக ஆடியிருந்தார்.

'யார்க்கர்' நடராஜன்

இடதுகை வேகப்பந்து வீச்சாளரான நடராஜனின் யார்க்கர் பந்துகள், பிரெட் லீ உள்ளிட்ட பல கிரிக்கெட் ஜாம்பவான்களின் பாராட்டினையும் பெற்றிருந்தது. தொடர்ந்து, இந்திய அணியிலும் அவர் இடம்பிடித்து ஆடி வந்தார். ஆனால், காயம் காரணமாக அவருக்கு வாய்ப்பு கிடைக்காமல் நடராஜன் இருந்து வரும் நிலையில், அவரை ஐபிஎல் ஏலத்தில் மீண்டும், ஹைதராபாத் அணியே எடுத்துள்ளது. விரைவில் தொடங்கவுள்ள ஐபிஎல் போட்டிகளிலும், அவர் மீண்டும் களமிறங்கி அசத்துவார் என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் உள்ளனர்.

Actor Sathish visits T Natarajan house photo gone viral

நன்றிண்ணா

இதனையடுத்து, சேலத்திலுள்ள நடராஜனின் வீட்டிற்கு தான் நடிகர் சதீஷ் நேரில் சென்றுள்ளார். இது தொடர்பான புகைப்படங்களை, தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள நடராஜன், "விவரிக்க முடியாத மற்றும் உற்சாகமான உணர்வுகளில் ஒன்று என்னவென்றால், உங்களின் நண்பர் உங்களை நேரில் சந்திக்கும் போது தான். நன்றி சதீஷ் அண்ணா" என குறிப்பிட்டுள்ளார்.

 

முன்னதாக, விஜய் டிவியின் 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சி மூலம் பிரபலமான புகழும், நடராஜன் வீட்டிற்கு சென்றிருந்த நிலையில், அவருக்கு கறி விருந்து வழங்கப்பட்டிருந்தது. இது தொடர்பான ரசிகர்கள் மத்தியில் அதிகம் லைக்குகளை அள்ளி இருந்தது குறிப்பிடத்தக்கது.

Tags : #T NATARAJAN #SATHISH #PHOTO

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Actor Sathish visits T Natarajan house photo gone viral | Tamil Nadu News.