PUDUCHERRY : உயிரை விடும் கடைசி நொடியிலும் பாகனின் கட்டளையை ஏற்ற லட்சுமி யானை..! கலங்க வைத்த நிகழ்வு.!
முகப்பு > செய்திகள் > தமிழகம்புதுச்சேரி மணக்குள விநாயகர் கோவிலில் ஓய்வில் இருந்த யானை லட்சுமி நடைபயிற்சியின் போது மயங்கி விழுந்து மரணம் அடைந்தது.

Also Read | “தொடல.. கட்டிப்பிடிக்கல.. க்ரஷ் மட்டும்தான்.. மனசுல என்ன இருக்குனு ரச்சிதா சொல்லணும்”.. ராபர்ட் EXCLUSIVE
கடந்த 1996ம் ஆண்டு இக்கோவிலுக்கு அழைத்துவரப்பட்ட லட்சுமி யானை புதுச்சேரி பக்தர்களுக்கு பிடித்தமான யானையாகவும் இருந்து வந்துள்ளது. அண்மை காலமாக நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டு இருந்ததாக கூறப்படும் லட்சுமி யானை நடை பயிற்சியின் போது மயங்கி விழுந்து அங்கேயே உயிரிழந்தது. முன்னதாக லட்சுமி யானை வேதபுரீஸ்வரர் கோவில் வளாகத்தில் இருக்கும் கொட்டிலில் 15 நாட்கள் ஓய்வெடுத்து வந்தது.
இந்த ஓய்வு காலத்தில் யானை லட்சுமி கோயிலுக்கு வரவில்லை. பார்வையாளர்களும் யானையை பார்க்க வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டது. தவிர பழ வகைகளை தவிர்த்து களி, பனை, தென்னை மட்டை, அரசமர இலை மற்றும் ஊட்டச்சத்து மருந்துகள் லட்சுமிக்கு வழங்கப்பட்டு வந்தன.
இந்நிலையில்தான் நடை பயிற்சி சென்றபோது மயங்கி விழுந்து உயிரிழந்த லட்சுமி யானைக்கு பக்தர்கள், புதுவை துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன், புதுவை முன்னாள் முதல்வர் நாரயணசாமி உள்ளிட்டோரும் நேரில் வந்து கண்டு அஞ்சலி செலுத்தினர்.
முன்னதாக லட்சுமி யானை இறப்பதற்கு முன்பாக பாகன் சக்திவேலை பிடித்து இழுத்து அவருடன் பாசப்பிணைப்பை காட்டும் வீடியோ ஒன்று வைரலானது. இந்நிலையில்தான், இறக்கும் தருவாயில், அதாவது மயங்கி விழுந்து இறக்கும் ஒரு நொடிக்கு முன்பாக கார் ஒன்றுக்கு பின்புறம் நின்றிருந்த லட்சுமி யானை பாகன் சக்திவேலின் கட்டளையை ஏற்று, அங்கிருந்து நகர்கிறது.
நகர்ந்தவுடனேயே மயங்கி கீழே விழுகிறது. இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் பக்தர்களை கலங்கவைத்துள்ளது.

மற்ற செய்திகள்
