மீன் பிடிக்க வலையை வீசியபோது காத்திருந்த அதிர்ச்சி!.. நிலைம கைய மீறி போயிட்டிருக்கு!.. கொரோனா காலத்திலயா இப்படி ஆகணும்!?.. நொறுங்கிப்போன மக்கள்!
முகப்பு > செய்திகள் > இந்தியாகோவா மாநிலத்தில் உள்ள கடல் பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த மீனவர்களின் வலையில் மீன்களை விட அதிகமாக பிளாஸ்டிக் கழிவுகள் சிக்கியுள்ள சம்பவம் மீனவர்களிடயே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உலகின் பிளாஸ்டிக் பயன்பாடு அதிகரித்ததை தொடந்து நிலங்கள் மட்டுமின்றி நீர் நிலைகளும் வரலாறு காணத வகையில் மாசு அடைந்து வருகிறது. இயற்கை பாதுகாப்புக்கான சர்வதேச ஒன்றியத்தின் (ஐ.யூ.சி.என்) சமீபத்திய அறிக்கையின் படி, ஒவ்வொரு ஆண்டும் உலகில் உற்பத்தி செய்யப்படும் 300 மில்லியன் டன் பிளாஸ்டிக்கில், சுமார் 8 மில்லியன் டன் கடல்களில் கலப்பதாகவும், அவற்றில் 80% கடல் குப்பைகள் கடல் நீரில் மேற்பரப்பில் உள்ளதாக கூறுகிறது.
இது போன்ற பிளாஸ்டிக் குப்பைகள், கடல்வாழ் உயிரினங்களின் உடலில் சென்று பாதிப்பை ஏற்படுத்துவதோடு இனப்பெருக்கத்தையும் ஏற்படுத்தி வருகிறது. இதன் காரணமாக, பிளாஸ்டிக் பயன்பாடுகளை குறைக்க சர்வதேச அமைப்புகள் பல்வேறு விழிப்புணர்வு பிரசாரங்களை மேற்கொண்டு வருகின்றன.
இந்நிலையில், பருவமழை காற்றுக்குப் பிறகு கோவா கடல்பகுதியில் மீன் படிக்க சென்ற மீனவர்களின் வலையில் மீன்களை காட்டிலும் பிளாஸ்டிக் கழிவுகள் அதிகம் இருந்துள்ள சம்பவம் மீனவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இது கடல் மாசுபாட்டை துள்ளியமாக கோடிட்டு காட்டுகின்றன.
இது குறித்து தெரிவித்துள்ள கோவாவின் கேவெலோசிம் கடற்கரை மீனவர்கள், நான் 47 ஆண்டுகளாக நாங்கள் மீன் பிடித்து வருகிறோம். இந்த ஆண்டு வலைகளில் ஒரு வகையான குப்பை இழுக்கப்படுவதை எங்கள் வாழ்க்கையில் பார்த்ததில்லை. யாரோ ஒருவர் வேண்டுமென்றே குப்பைகளின் லாரிகளை ஆறுகள் அல்லது கடலுக்குள் கொட்டுவது போல் இருந்ததாக தெரிவித்தனர்.
முந்தைய ஆண்டுகளைப் போலல்லாமல், இந்த ஆண்டு, கொரோனா தொற்றுநோயால் வேலை இழப்பு மற்றும் வளர்ந்து வரும் சுற்றுலாத் துறையை மூடுவதால் அதிகமான இளைஞர்கள், நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளனர். தற்போது கடலில் மீன்களுக்கு பதிலாக பிளாஸ்டிக் கழிவுகளை பிடிப்பதென்பது அவர்களை மேலும் நஷ்டத்துக்கு அழைத்துச் சென்றுள்ளது.
இந்த கடல்மாசு குறித்து எச்சரித்துள்ள நிபுணர்கள், இந்த சிக்கல் அடுத்த ஆண்டுகளில் மேலும் பெருகும் என தெரிவித்துள்ளனர். ஏனெனில், காற்று கடற்கரைக்கு செங்குத்தாக வீசுகிறது மற்றும் அலைகள் மிதக்கும் எதையும் கொண்டு வருகின்றன.
காற்று வலுவாகவும், அலைகள் அதிகமாகவும் இருக்கும் நாட்களில், அவை கடற்கரையில் ஏராளமான குப்பைகளைக் கண்டுபிடிக்கும் என தெரிவித்தனர். இது உண்மையில் கடலில் உள்ளவற்றின் சிறிய மாதிரி மட்டுமே. உண்மையான பிரச்சினை மிகப் பெரியது, மேலும் மோசமடையப் போகிறது, என்றும் நிபுணர்கள் ஏச்சரித்தனர்.

மற்ற செய்திகள்
