'சர்வதேச எழுச்சி நட்சத்திரம்- ஆசியா'...'அமெரிக்காவில் காத்திருக்கும் விருது'.....'குஷியில் தொண்டர்கள்'!
முகப்பு > செய்திகள் > தமிழகம்By Jeno | Nov 07, 2019 10:41 AM
அமெரிக்கா செல்லும் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்துக்கு விருது வழங்கப்பட இருப்பது அவரது கட்சி தொண்டர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் அரசுமுறை பயணமாக அமெரிக்க செல்கிறார். இதுகுறித்த அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதில் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் நவம்பர் 8 முதல் 17 வரை அமெரிக்காவில் இருப்பார். சிகாகோ, ஹூஸ்டன், வாஷிங்டன் டிசி மற்றும் நியூயார்க் உள்ளிட்ட நகரங்களில் ஓ.பன்னீர் செல்வம் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார்.
சிகாகோ தமிழ்ச் சங்கம் சார்பாக நடத்தப்படும் குழந்தைகள் தின நிகழ்ச்சி, சர்வதேச சமூக ஆஸ்கர் 2019 விழா மற்றும் இந்திய அமெரிக்க தொழில் கூட்டமைப்பு மற்றும் அமெரிக்க தமிழ் தொழிலதிபர்கள் சார்பாக நடத்தப்படும் வட்டமேசை கருத்தரங்கு உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளில் கலந்துகொள்கிறார். அதோடு சிகாகோ நகரிலுள்ள முக்கிய தொழில்முனைவோர்களிடம் தமிழ்நாட்டில் முதலீடு செய்ய அழைப்பு விடுக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் அமெரிக்க பன்முக கலச்சார கூட்டணி அமைப்பு சார்பாக நடத்தப்படும் விழாவில் சர்வதேச எழுச்சி நட்சத்திரம்- ஆசியா என்ற விருது ஓ.பன்னீர் செல்வத்துக்கு வழங்கப்படவுள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு இந்த அமைப்பு சார்பாக, இந்திய அரசியலில் வளர்ந்து வரும் நட்சத்திரம் என்ற விருது தமிழிசை சௌந்தரராஜனுக்கு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.