KAMAL HAASAN : "ஒரு நாடா இருக்குறது பிரச்சனை தான்.. ஆனா தூண்டிவிட்டது யாரு.?".. BIGG BOSS ல் கமல் பரிந்துரைத்த புத்தகம்.!
முகப்பு > செய்திகள் > தமிழகம்பிக் பாஸ் நிகழ்ச்சியில் அனைத்து சீசன்களையும் இதுவரை தொகுத்து வழங்கி வரும் நடிகர் கமல்ஹாசன், வழக்கமாக பிக் பாஸ் நிகழ்ச்சியில் தான் விரும்பிய புத்தகங்களை, மற்றவர்களுக்கு பரிந்துரைக்க வேண்டும் என தான் நினைக்கிற புத்தகங்களை பரிந்துரைத்து வருவது வழக்கம்.
![Kamal Haasan book suggestion in bigg boss Tamil 2022 Nov 6 Kamal Haasan book suggestion in bigg boss Tamil 2022 Nov 6](http://tamil.behindwoods.com/news-shots-tamil-news/images/tamilnadu/kamal-haasan-book-suggestion-in-bigg-boss-tamil-2022-nov-6.jpg)
கமல்ஹாசன் பரிந்துரைக்கும் புத்தகங்களுக்கு ரசிகர்கள் மத்தியிலும், புத்தக பிரியர்கள் மத்தியிலும் எப்போதும் ஒரு எதிர்பார்ப்பு இருக்கும். அந்த வகையில் பிக்பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சியில், நடிகர் கமல்ஹாசன், தம்முடைய பிறந்தநாளுக்கு முன்பான நவம்பர் 6ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை, எபிசோடில் ஒரு குறிப்பிட்ட புத்தகத்தை பரிந்துரைத்தார்.
அதன்படி, Abu-Sharif Bassam மற்றும் Uzi Mahnaimi ஆகிய இருவரும் இணைந்து எழுதிய "Tried By Fire" என்கிற புத்தகத்தை பரிந்துரைத்தார்.
இந்த புத்தகம் உருவான பின்னணி குறித்து பேசிய கமல்ஹாசன், "தேசம், நாடு உள்ளிட்ட எல்லை கோடுகள் இன்னும் கொஞ்ச நாளில் மறைந்து விடும். பாஸ்போர்ட் இல்லாமல் பறக்கும் வேடந்தாங்கல் பறவைக்கு இருக்கும் அறிவு கூட நமக்கு இல்லாமல் போய்விடுமா என்ன?. நாம் அரசியல்வாதிகள் நினைத்தால் இந்த எல்லைக் கோடுகளை அழிக்க முடியும். நான் எந்த ஊரைச் சொல்கிறேன் என்று நீங்கள் நினைக்கலாம். காந்தியாரின் கனவாக இருக்கிற அந்த பாகிஸ்தானையே கூட நான் சொல்வதாக நீங்கள் வைத்துக் கொள்ளுங்கள்.
என்ன பெரிய வித்தியாசம்?, அங்கிருக்கும் நடிகர்களுக்கு நான் ரசிகனாக இருக்கிறேன். இங்கே இருக்கும் நடிகர்களை அவர்கள் விரும்புகிறார்கள். அங்குள்ள கிரிக்கெட் வீரர்களுக்கு ரசிகர்கள் இங்கு இருக்கிறார்கள். நம் வீரர்களுக்கு அங்கு ரசிகர்கள் இருக்கிறார்கள். இசையில் இருந்து பிரியாணி வரை எல்லாமே ஒன்றாக தான் இருக்கிறது. ஒரு நாடாக இருப்பதில் அதிகம் பிரச்சனை தான். ஆனால் அந்த பிரச்சினையை தூண்டி விட்டவர்கள் யார் என்று நாம் பார்க்க வேண்டும்.
அதுதானே ஒட்டும் பசை. அதை நீர்த்துப் போக வைப்பது பலருக்கு வேலையாக இருக்கிறது. அதை செய்யவில்லை என்றால் பலரின் தொழில் கெடும். தங்களுடைய சுயலாபத்துக்காக அனைத்தையும் அரசியலாக்க கூடிய செயலை தான் இந்த புத்தகம் விளக்குகிறது.
போர் என சாதாரணமாக சொல்கிறோம். ஆனால் அதில் எத்தனை உயிர் போகிறது, நம் ஆட்கள் எத்தனை பேர் சாகிறார்கள். இவை அனைத்தும் ஒரு ஈகோவுக்காக நடக்க வேண்டுமா?. அதைத்தான் இந்த புத்தகம் விளக்குகிறது. அதனால் இந்த புத்தகத்தை நான் பரிந்துரைக்கிறேன். இந்த புத்தகத்தை நான் பரிந்துரைப்பதன் மூலமாக இது தமிழாக்கம் செய்யப்படலாம் என்று நம்புகிறேன்" என கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
Tried By Fire என்ற புத்தகம் குறித்து கமல்ஹாசன் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பேசி உள்ளதால், இதுகுறித்து புத்தக பிரியர்கள் பலரும் இணையத்தில் தேடியும் வருகின்றனர்.
Also Read | Video : "நீ ஒரு பெரிய ஆர்ட்டிஸ்ட்ன்னு".. சூறாவளி மாதிரி சுழன்ற 'SKY'.. "எங்க பந்து போட்டாலும் வெளிய தான்"..
![](https://www.behindwoods.com/images/spacer.gif)
மற்ற செய்திகள்
![](https://www.behindwoods.com/images/spacer.gif)